Published:Updated:

நடைபயணத்தில் புகுந்த பாம்பு: கருணை காட்டிய வைகோ!

நடைபயணத்தில் புகுந்த பாம்பு: கருணை காட்டிய வைகோ!
நடைபயணத்தில் புகுந்த பாம்பு: கருணை காட்டிய வைகோ!

சென்னிமலை: பூரண மது விலக்கு கோரி நடைபயணம் கொண்டிருக்கும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று மதியம் வெள்ளோடு அருகே சென்று கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று குறுக்கே வந்தது. அதை கொல்ல வேண்டாம். விட்டு விடுங்கள் என அவர் கூறியதால், தொண்டர்கள் அதை பிடித்து, காட்டில் விட்டனர்.

நடைபயணத்தில் புகுந்த பாம்பு: கருணை காட்டிய வைகோ!

பூரண மதுவிலக்கு கோரி கடந்த 16ஆம் தேதி பொள்ளாச்சியில் தனது 3ஆம் கட்ட நடைபயணத்தை தொடங்கினார் வைகோ. 11ஆம் நாள் பயணம் இன்று காலை சென்னிமலையில் தொடங்கியது.
நண்பகலில் வெள்ளோட்டில் மதிய உணவை முடித்துவிட்டு, மாலை 4.00க்கு அங்கிருந்து தனது பயணத்தை தொடங்கினார் வைகோ. மாலை 6.30 மணியளவில் புதுவலசு என்ற கிராமத்தை நெருங்கியபோது ஐந்தரை அடி நீளமுள்ள பச்சைபாம்பு ஒன்று வைகோவுக்கு குறுக்கே வந்தது. பதறிப்போனார்கள் தொண்டர்கள்.

நடைபயணத்தில் புகுந்த பாம்பு: கருணை காட்டிய வைகோ!

அப்போது மாணவர் அணியைச் சேர்ந்த நந்தன் என்பவர் உடனே அந்தப் பாம்பை பிடித்தார். அதை தனது கையில் வாங்கிக் கொண்ட ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பாம்பின் கழுத்துப்பகுதியைப் பிடித்தபடி அரை கி.மீ. தூரம் நடந்து வந்தார்.

நடைபயணத்தில் புகுந்த பாம்பு: கருணை காட்டிய வைகோ!

பின்னர் சிறிய பசுமையான காட்டுப்பகுதியை அடைந்தவுடன் அந்த பாம்பின் மீது இரக்கம் காட்டிய வைகோ, 'ஒரு உயிரைக் கொல்வது சரியல்ல அதை இங்கேயே விட்டுவிடுங்கள்' என்று சொன்னார். அதைத் தொடர்ந்து அந்த பாம்பு காட்டுக்குள் விடப்பட்டது.

நடைபயணத்தில் புகுந்த பாம்பு: கருணை காட்டிய வைகோ!

பாம்பைப் பிடித்த நந்தனை வைகோ 'தமிழ் நாட்டின் புருஸ்லி’ என்று கூறி பாராட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உள்ளிட்ட ம.தி.மு.க.வினர் பங்கேற்ற இந்த நடைபயணத்தின் இறுதியில் மேட்டுக்கடையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.