Published:Updated:

“வெறும் 15 நிமிடங்கள் என்னுடன் விவாதிக்கத் தயாரா?”- மோடிக்கு சவால்விடும் ராகுல் காந்தி

“வெறும் 15 நிமிடங்கள் என்னுடன் விவாதிக்கத் தயாரா?”- மோடிக்கு சவால்விடும் ராகுல் காந்தி
“வெறும் 15 நிமிடங்கள் என்னுடன் விவாதிக்கத் தயாரா?”- மோடிக்கு சவால்விடும் ராகுல் காந்தி

ரபேஃல் விமான ஒப்பந்தம் குறித்து வெறும் 15 நிமிடங்கள் மட்டும் என்னுடன் பேசி என் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயாரா என பிரதமர் மோடியிடம் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

“வெறும் 15 நிமிடங்கள் என்னுடன் விவாதிக்கத் தயாரா?”- மோடிக்கு சவால்விடும் ராகுல் காந்தி

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது . முதல்கட்ட தேர்தல் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அந்த மாநிலத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. நேற்று கொரியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, “ மோடி அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நேர்மையான பொதுமக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் எளிதாக தப்பித்துக் கொண்டனர். விவசாயிகள் நீண்ட நாள்களாக விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மோடி அரசோ பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி செய்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் விவசாயிகளின் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும். ரபேஃல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி என்னுடன் விவாதிக்கத் தயாரா? எங்கே எப்போதும் என்பதை அவரே தீர்மானிக்கட்டும். வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே என்னுடன் விவாதித்தால் போதும். அனில் அம்பானி, ஃபிரான்ஸ் அதிபர் போன்ற என்னுடைய சிறிய கேள்விகள் குறித்து மட்டுமே விவாதிக்கப்படும். அதற்கு அவர் தயாரா? எனச் சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து, ‘ காங்கிரஸ் கட்சி மக்களுக்கு எப்போதும் நிறைவேற்றக்கூடிய உண்மையான வாக்குறுதியை மட்டுமே அளிக்கும். நான் ஒருபோதும் பொய் வாக்குறுதிகளை அளித்தது இல்லை. கடந்த 15 வருடங்களாக என்னைக் கவனித்திருந்தால் அது உங்களுக்குப் புரியும். ஆனால் பாஜகவும், சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங்கும் அப்படியில்லை. அவர்கள் இதுவரை எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதில்லை” என கடுமையாக விமர்சித்தார்.