Published:Updated:

சென்னைக்கு, வீராணம் ஏரி தண்ணீர் நிறுத்தம்

சென்னைக்கு, வீராணம் ஏரி தண்ணீர் நிறுத்தம்
சென்னைக்கு, வீராணம் ஏரி தண்ணீர் நிறுத்தம்
சென்னைக்கு, வீராணம் ஏரி தண்ணீர் நிறுத்தம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி தற்போது வறண்டு போனதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் இருந்து 14 கி.மீ தொலைவில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.5 அடி.

இந்த ஏரியில் இருந்து நவம்பர் மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரையில் வினாடிக்கு 77 கனஅடி நீர் வீதம் சென்னைக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் இந்தாண்டு பருவமழை பொய்த்துப் போனதாலும், காவிரியில் நீர் திறந்து விடப்படாததாலும் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது.

தற்போது வீராணம் ஏரி முற்றிலும் வறண்ட நிலையில் காணப்படுவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

##~~##
இதற்கு மாற்று ஏற்பாடாக புதிய வீராணம் திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யுமா என்பது கேள்விகுறிதான். தண்ணீர் பற்றாக்குறை அபாயம் ஏற்படும் முன் தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருக்கிறது.