Published:Updated:

இலங்கை தமிழர்கள் 88 பேர் தமிழக போலீசாரிடம் இன்று ஒப்படைப்பு!

இலங்கை தமிழர்கள் 88 பேர் தமிழக போலீசாரிடம் இன்று ஒப்படைப்பு!
இலங்கை தமிழர்கள் 88 பேர் தமிழக போலீசாரிடம் இன்று ஒப்படைப்பு!

ஓசூர்: கர்நாடக மாநிலம், மங்களூரில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற போது பிடிபட்ட 88 இலங்கை தமிழர்கள், இன்று தமிழக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இலங்கை தமிழர்கள் 88 பேர் தமிழக போலீசாரிடம் இன்று ஒப்படைப்பு!

தமிழ்நாட்டில் கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், பவானி சாகர், குடியாத்தம், மண்டபம் ஆகிய பகுதியிலுள்ள முகாம்களில் இருந்த இலங்கை தமிழர்கள் 88 பேர் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து ரயில் மூலம் மங்களூர் சென்றனர்.

இலங்கை தமிழர்கள் 88 பேர் தமிழக போலீசாரிடம் இன்று ஒப்படைப்பு!
##~~##
மங்களூர் துறைமுகப்பகுதியில் படகுக்காக காத்திருந்த வேளையில் கர்நாடக போலீசார் இவர்களை பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். இவர்கள் தமிழக முகாம்களில் இருந்த இலங்கை தமிழர்கள் என தெரியவந்ததும், பிடிபட்ட 88 பேரையும் இன்று காலை 11 மணியளவில் தமிழக கியூ பிராஞ்ச் போலீசாரிடம், கர்நாடக-தமிழக எல்லைப்பகுதியான ஓசூரில் ஒப்படைத்தனர்.
இலங்கை தமிழர்கள் 88 பேரையும் ஒரு கல்யாண மண்டபத்திற்கு அழைத்து சென்ற கியூ பிரிவு போலீசார், அவர்களிடம், யார், யார் எந்தெந்த முகாமை சேர்ந்தவர்கள் என்ற பட்டியலை கேட்டுக் கொண்டு, அந்தந்த முகாம்களுக்கு, தனி வாகனத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

-எஸ்.ராஜாசெல்லம்