Published:Updated:

காவல் துறை கெடுபிடியால் சபரிமலையில் குறைந்தது கூட்டம் - போக்குவரத்து சேவையும் குறைப்பு!

காவல் துறை கெடுபிடியால் சபரிமலையில் குறைந்தது கூட்டம் - போக்குவரத்து சேவையும் குறைப்பு!
News

காவல் துறை கெடுபிடி காரணமாக சபரிமலையில் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. இதனால், கே.எஸ்.ஆர்.டி.சி  பேருந்துகளின்  இயக்கமும் குறைக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில், அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பைத் தொடர்ந்து, பா.ஜ.க போராட்டம் நடத்திவருகிறது. தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரள அரசு உறுதியாக உள்ளது. மண்டல கால பூஜைக்காக, கடந்த 16-ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்நிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகள் காவல் துறை கட்டுப்பாட்டில் வந்தது. இந்து ஐக்கிய வேதி தலைவர் சசிகலா, பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் சுரேந்திரன் மற்றும் 85-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகு, சந்நிதானத்தில் பக்தர்கள் யாரும் தங்கக்கூடாது, பம்பையில் இருந்து 10 மணிக்கு மேல் பக்தர்கள் சந்நிதானம் செல்லக் கூடாது என கடும் கட்டுப்பாடுகளைக் காவல் துறை விதித்துள்ளது. காவல் துறையின் கெடுபிடி, பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

சபரிமலை நடை திறக்கப்பட்ட நான்காம் நாளான இன்றும் பக்தர்கள் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருந்தது. காலையில் 4 மணி நேரத்தில் சுமார் 8,000 பக்தர்களே 18-ம் படியைக் கடந்துசென்றனர். கடந்த ஆண்டில், ஒரு மணி நேரத்தில் 10,000 - க்கும் அதிகமான பக்தர்கள் சந்நிதானத்திற்குச் சென்றனர். அதுபோல, நிலக்கல்லில் இருந்து பம்பைக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் காவல் துறை கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது. இதனால், பேருந்தில் இருக்கைகள் நிரம்பினாலும் காவல்துறை அனுமதிக்காகப் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கும் அவலநிலை உள்ளது. பக்தர்கள் வருகை குறைந்ததால், 310 பேருந்துகளில் 50 பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. அதுபோல, 10 மின்சாரப் பேருந்துகளில் 3 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. காவல் துறை தனது கெடுபிடியைத் தளர்த்தினால், பக்தர்கள் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.