Published:Updated:

‘விடுதலையில் அரசியல் பாகுபாடு!’ - மன உளைச்சலில் முருகன், நளினி

‘விடுதலையில் அரசியல் பாகுபாடு!’ - மன உளைச்சலில் முருகன், நளினி
‘விடுதலையில் அரசியல் பாகுபாடு!’ - மன உளைச்சலில் முருகன், நளினி

‘விடுதலையில் அரசியல் பாகுபாடு!’ - மன உளைச்சலில் முருகன், நளினி

‘அரசியல் காரணங்களுக்காக விடுதலை தள்ளிப்போவதை நினைத்து ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் நளினி மற்றும் அவரின் கணவர் முருகன் கவலையில் இருப்பதாக’’ இருவரையும் சிறையில் சந்தித்துப் பேசிய வழக்கறிஞர் கூறினார்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி மற்றும் அவரின் கணவர் முருகன், வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்துவருகின்றனர். இருவரையும் வழக்கறிஞர் புகழேந்தி நேற்று மாலை சந்தித்து உரையாடினார்.

 பின்னர் சிறைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய வழக்கறிஞர், ‘‘தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவந்த மூவரின் விடுதலை வரவேற்கத்தக்கது. மாணவிகளைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபடவில்லை. அதே நேரத்தில், ராஜீவ் கொலை வழக்கில் இரு மடங்கு தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை விடுதலை செய்வதில் அரசியல் பாகுபாடு காட்டப்படுகிறது.  

‘விடுதலையாவோம்’ என்ற நம்பிக்கையில் முருகனும், நளினியும் இருக்கிறார்கள். விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைவாக முடிவெடுக்காததால் இருவரும் வருத்தத்தில் உள்ளனர். ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்த பின்பும், அரசியல் காரணங்களுக்காக விடுதலை தள்ளிப்போகிறது. கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு நளினி ஆயிரம் ரூபாய் கொடுத்தார்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு