Published:Updated:

`மக்களை கையேந்த வைத்துவிட்டீர்கள்!’ - ரேஷன் அரிசி விவகாரத்தில் உயர் நீதிமன்றம்

`மக்களை கையேந்த வைத்துவிட்டீர்கள்!’ - ரேஷன் அரிசி விவகாரத்தில் உயர் நீதிமன்றம்
`மக்களை கையேந்த வைத்துவிட்டீர்கள்!’ - ரேஷன் அரிசி விவகாரத்தில் உயர் நீதிமன்றம்

தமிழக அரசால் வழங்கப்படும் `விலையில்லா அரசி திட்டம்’ குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியான சில கருத்துகளை தெரிவித்துள்ளது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இலவச அரிசியை வழங்கலாம் என யோசனையும் தெரிவித்துள்ளது நீதிமன்றம்.


ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வின் முன்பு இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று, இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஆண்டுக்கு சுமார் 2,110 கோடி ரூபாய் வரை விலையில்லா அரிசி திட்டத்துக்காக செலவிடப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. 

இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த நீதிமன்றம், விலையில்லா அரிசியை வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கலாம் என்ற யோசனையைத் தெரிவித்தது. மேலும், ``விலையில்லா அரிசிக்காகச் செலவுசெய்த பணத்தை உள்கட்டமைப்பை மேம்படுத்தியிருக்கலாம். அப்போது அனைவரும் பயனடைந்திருப்பார்கள். தேர்தல் லாபத்துக்காக இலவசங்களை அறிவித்து மக்களைக் கையேந்தும் நிலைக்குத் தள்ளிவிட்டீர்கள்” எனக் கருத்து தெரிவித்தது. 

மேலும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே விலையில்லா அரிசி வழங்கினால் ஆகும் செலவுகுறித்து அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், வழக்கை வரும் 30 -ம் தேதிக்கு ஒத்திவைத்தது.