Published:Updated:

“எங்கு போய்விட்டு வந்தேன் தெரியுமா?” - சிறையில் சசிகலா தந்த வாக்குமூலம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“எங்கு போய்விட்டு வந்தேன் தெரியுமா?” - சிறையில் சசிகலா தந்த வாக்குமூலம்
“எங்கு போய்விட்டு வந்தேன் தெரியுமா?” - சிறையில் சசிகலா தந்த வாக்குமூலம்

“எங்கு போய்விட்டு வந்தேன் தெரியுமா?” - சிறையில் சசிகலா தந்த வாக்குமூலம்

பிரீமியம் ஸ்டோரி

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதிகள் பெற சசிகலா தரப்பு, சிறைத்துறை அதிகாரிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகச் சொல்லப்படும் வழக்கு விசாரணை இப்போது வேகமெடுத்துள்ளது. கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்த விசாரணையில் சசிகலா, புகழேந்தி, தினகரன், ஆஸ்திரேலியா பிரகாஷ், கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா, அப்போது இருந்த டி.ஜி.பி சத்தியநாராயண ராவ், சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் எனப் பெரிய பட்டியலை வைத்துக்கொண்டு விசாரணை நடத்துகிறது. ஆறு பேர் கொண்ட விசாரணை டீம், சசிகலாவிடம் இரண்டரை மணி நேரம் துருவித் துருவி விசாரணை செய்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட மூவரும், 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி, பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். ‘சிறையில் சசிகலா தரப்பிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு, அப்போதைய சிறைத் துறை டி.ஜி.பி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட சிறைத்துறை அதிகாரிகள், அவர்களுக்குச் சிறப்புச் சலுகை அளித்ததாக’  சிறைத்துறை டி.ஐ.ஜி-யான ரூபா கடந்த ஆண்டு ஜூலை மாதம் பரபரப்பைக் கிளப்பினார்.

“எங்கு போய்விட்டு வந்தேன் தெரியுமா?” - சிறையில் சசிகலா தந்த வாக்குமூலம்

அப்போது ரூபா கொடுத்த அறிக்கையில், ‘சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுச் சிறை சென்றுள்ள சசிகலா, சிறையில் சிறப்புச் சமையலறை, தனி வரவேற்பு அறை, பெரிய அளவிலான‌ தொலைக்காட்சி, அறை முழுவதும் விலையுயர்ந்த தரை விரிப்புகள், ஜன்னல் ஸ்கிரீன், பெரிய மெத்தை, பார்வையாளர்கள் அமர்வதற்கு நான்கு நாற்காலிகள், ஒரு மேஜை உள்ளிட்ட வசதிகள் பெற்றிருந்தார். இந்தச் சிறப்பு வசதிகளை சசிகலா தரப்புக்குத் தருவதற்கு இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சப் பணத்தை, சிறைத் துறை உயர் அதிகாரிகள் பெற்றுள்ளனர்’ என ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.

ரூபாவின் குற்றச்சாட்டுகளால் ஆட்டம் கண்டுபோன கர்நாடக அரசு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை செய்தது. அவர் அளித்த அறிக்கையில், ‘டி.ஐ.ஜி ரூபா குறிப்பிட்டபடி, விதிமுறைகளை மீறி, சில முக்கியக் கைதிகள் சிறப்பு வசதிகள் பெற்றுள்ளது அனைத்தும் உண்மை. சிறையில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் செல்போன் ஜாமர் கருவிகளை முறையாகப் பராமரித்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும். சிறையில் சிறப்புச் சலுகைகள் பெற சசிகலா தரப்பு லஞ்சம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை தனியாக விசாரணை செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

விசாரணை அதிகாரி வினய்குமார் அறிக்கையின்படி, கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை, குற்ற எண்.7/2018-ல் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டது. இதற்காக நீதிமன்ற உத்தரவின்படி சிறைத்துறை ஏ.எஸ்.பி மரியகவுடா முன்னிலையில், சசிகலாவிடம் ஜூலை 19-ம் தேதி மதியம் 12 மணிக்குத் தொடங்கி 2.30 மணி வரை விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின்போது, மரியகவுடா, கர்நாடக லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி பல்ராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரப்பா, ஒரு மொழிபெயர்ப்பாளர், கணிப்பொறியாளர், ஒரு வீடியோ கேமராமேன் மற்றும் சசிகலாவின் வழக்கறிஞர் சுரேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு சசிகலாவிடம் பதில்பெற்று அனைத்தும் வீடியோவில் பதிவுசெய்யப்பட்டன. அப்போது கேட்கப்பட்ட கேள்விகளில் சில...

‘‘சிறை விதிமுறைகளை மீறி, சொகுசு வசதிகள் பெற்றுள்ளதாக உங்கள்மீது குற்றச்சாட்டு உள்ளதே?’’

‘‘சிறையில் ஆரம்பம் முதல் இன்று வரை சாதாரண அறையில்தான் இருக்கிறேன். சிறையில் நான் எந்தச் சலுகையும் பெறவில்லை.’’

(புகைப்படங்களைக் காட்டி) ‘‘சிறையில் உங்களுக்காகத் தனி அறை, தனிச் சமையலறை, டி.வி., ஃபர்னிச்சர் எல்லாம் இருந்துள்ளனவே?’’

‘‘இந்த வசதிகள் எனது அறையில் கிடையாது. இது எனது அறையும் இல்லை... இவை எனது அறையில் எடுத்த படங்கள் இல்லை.’’

‘‘சிறைவிதிகளை மீறி வண்ண உடைகளை அணிவதாகக் குற்றச்சாட்டு உள்ளதே?’’

‘‘சிறை விதிமுறைக்கு உட்பட்டுத்தான் வண்ண உடைகளை அணிகிறேன். இப்போதும் அணிந்திருக்கிறேன்.’’

‘‘நீங்கள் வெளியே இருந்து, சிறைக்குள் வரும்போது பை கொண்டு வருகிறீர்களே... எங்கிருந்து கொண்டுவருகிறீர்கள்?’’

‘‘சிறையில் என்னைப் பார்க்கவந்த உறவினர்களைச் சந்தித்துவிட்டு, அவர்கள் கொடுத்த பழங்கள், பிஸ்கெட்கள் கொண்ட பையை, மீண்டும் எனது சிறை அறைக்குத் திரும்பியபோது கொண்டுவந்தேன்.’’

“எங்கு போய்விட்டு வந்தேன் தெரியுமா?” - சிறையில் சசிகலா தந்த வாக்குமூலம்

‘‘சிறையில் சிறப்பு வசதிகள் பெற நீங்கள் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தாகக் குற்றச்சாட்டு உள்ளதே?

‘‘எதற்காக நான் லஞ்சம் கொடுக்க வேண்டும்? சிறைக்குவந்த நாள் முதல் நான் சாதாரண அறையில்தான் இருக்கிறேன்.’’

‘‘ஆஸ்திரேலியா பிரகாஷ் என்பவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ‘சிறைத்துறை அதிகாரிகளிடம் பழக்கத்தை ஏற்படுத்தித் தருவதற்காக உங்களிடம் பணம் வாங்கிக் கொடுத்தேன்’ என்று தெரிவித்துள்ளாரே?’’

‘‘பிரகாஷ் யார் என்பதே எனக்குத் தெரியாது. அவர் எப்படி சந்திப்புகளை ஏற்படுத்தித் தர முடியும்?’’

‘‘புகழேந்தி உங்களுக்குச் சிறையில் ஏதாவது உதவிசெய்து கொடுத்தாரா?’’

‘‘புகழேந்தி எங்கள் கட்சிப் பொறுப்பாளர், அதைத் தாண்டி எந்தத் தொடர்பும் இல்லை.’’

‘‘டி.ஐ.ஜி ரூபா எப்போது வந்து உங்களைச் சந்தித்தார்?’’

‘‘அவர், ஏற்கெனவே மீடியாவில் தகவல் சொல்லிவிட்டு, அதன் பிறகுதான் என்னைச் சிறையில் சந்தித்தார்.’’

- எம்.வடிவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு