Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

Published:Updated:
கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பேரிஸன் கோவாலு!

டைசியாக, `வருங்கால முதல்வரே’ என்று சட்டசபை முன்னால் வெள்ளைச் சட்டையுடன் தனுஷுக்கும் போஸ்டர் அடித்துவிட்டார்கள் அவரின் ரசிகர்கள். தமிழக அரசியலில் மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படும் இதைத் தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் வேறு என்னென்ன மாற்றங்கள் நடக்கும்?  வறுகடலை சாப்பிட்டுக்கொண்டே சிந்தித்துப் பார்ப்போம்...

கம்பேரிஸன் கோவாலு!

• இளைய சூப்பர்ஸ்டார் தனுஷ் ரசிகர்கள் அடித்துள்ள போஸ்டர், சில சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு மனவருத்தம் தரும். ஏற்கெனவே, `பந்தியில் தள்ளி உட்கார்ந்ததால், நமக்கே நாலு இலைவிட்டு ஐந்தாவது இலையில்தான் தம்மாத்துண்டு கிடைச்சது’ என்று சோகத்தில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். இதில் இந்த போஸ்டர் வேறு. `இன்னும் மீனே சுடலை. அதுக்குள்ளே தலை எனக்குத்தான்னா எப்படி ப்ரோ?’ என அவர்களுக்குள்ளேயே ட்விஸ்ட் அடிக்க வாய்ப்புகள் உண்டு.

• `நீ பொல்லாதவன்னா நான் கெட்டவன்’, `ஏ ராசா இங்கே பார்றா’ என சும்மாவே இளைய சூப்பர்ஸ்டாரும் யங் சூப்பர்ஸ்டாரும் மாறி மாறி ஒரண்டை இழுத்துக்கொள்வார்கள். எனவே, அந்தப் பக்கமிருந்து `வருங்கால பிரதமரே’, `வருங்கால ஜனாதிபதியே’, `வருங்காலத் துணை வட்டாட்சியரே’ என்கிற கேப்ஷன்களுடன் போஸ்டர் வந்தாலும் வரும். காவிரிக்கு வாட்டர் பாட்டிலில் தண்ணி, ஜல்லிக்கட்டுக்கு வீட்டிலேயே மௌனப் போராட்டம் என எல்லாவற்றையும் அடுக்கி, அடுக்குமொழியில் ஒரு போஸ்டர் அடுத்து வரக்கூடும்.

• ரஜினி, கமலில் ஆரம்பித்து விஜய், அஜித், விஷால், சூர்யா, இப்போது தனுஷ் வரை `வருங்கால முதல்வர்’ ஆகிவிட்டார்கள்.  ஹிப்ஹாப் ஆதி மற்றும் ஆர்.ஜே.பாலாஜியை ஆல்ரெடி `வருங்கால அமைச்சர்களா’க்கி இலாகாக்களையும் ஒதுக்கிவிட்டார்கள். எனவே, அடுத்து சின்னத்தளபதி பரத், மக்கள் சூப்பர்ஸ்டார் லாரன்ஸ், மக்கள் தளபதி ஆர்.கே ஆகியோரும் அரசியலுக்குள் என்ட்ரியாகும் சம்பவங்கள் நடக்கலாம். வாவ்!

• தனுஷ் தனிக்கட்சி தொடங்குவாரா, எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பார், எட்டுவழிச் சாலைக்கு அவர் ஆதரவு தந்தால் அது இளைய சூப்பர்வழிச் சாலை ஆகுமா, கொள்கை பற்றிக் கேட்டால் இவருக்கும் தலை சுற்றுமா எனப் பரபரப்பான விவாதங்களும் “தனுஷ், நான் தூக்கி வளர்த்த புள்ள”, “அவர் ஒரு எளிய தமிழ்ப்பிள்ளை”, “ஏழைத்தாயின் மருமகன்” போன்ற பேட்டிகளும் தொலைக்காட்சிகளில் அனல் கிளப்பும்.