Published:Updated:

"அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொங்கலுக்குள் உள்ளே போய் விடுவார்" - ஆர்.எஸ்.பாரதி காட்டம்

"அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொங்கலுக்குள் உள்ளே போய் விடுவார்" - ஆர்.எஸ்.பாரதி காட்டம்
"அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொங்கலுக்குள் உள்ளே போய் விடுவார்" - ஆர்.எஸ்.பாரதி காட்டம்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொங்கலுக்குள் உள்ளே போய்விடுவார் என்று தி.மு.க-வின் ஆர்.எஸ்.பாரதி கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

"அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொங்கலுக்குள் உள்ளே போய் விடுவார்" - ஆர்.எஸ்.பாரதி காட்டம்

கோவை, போத்தனூர் பகுதியில் தி.மு.க மீனவரணி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஏ.காதர் இல்ல  திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தி.மு.க சார்பில் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கலைஞர் புகழஞ்சலி கூட்டம் நடத்த ஏற்கெனவே அனுமதி கோரி காவல்துறையில் மனு கொடுக்கப்பட்டு இருந்தது. அதற்குகாவல் துறையினர் வாய் மொழி மூலமாக அனுமதி அளித்தனர். இதையடுத்து, இதற்கான மேடை அமைக்கப்பட்டு, சுவரொட்டி ஒட்டி விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில்,திடீரென காவல்துறை அனுமதி மறுத்தது ஏன்?.

ஆர்.எஸ்பாரதி கூட்டத்தில் உரையாற்ற கூடாது, அவர் பேசினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர். நான்,முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது ஊழல் வழக்கு போட்டிருப்பதால் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. நான் கூட்டத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் காவல் துறை தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றது. எஸ்.பி.வேலுமணி தூண்டுதலின் பேரில் தான் அனுமதி மறுத்துள்ளனர். ஒரு வார காலத்துக்குள் காவல் துறை கூட்டம் நடத்த  அனுமதி அளிக்காவிட்டால் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி மணி மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும். அனுமதி வழங்கவில்லை எனில் இந்த பிரச்னை பூதாகரமாகும்.

எஸ்.பி.வேலுமணி வரும் பொங்கலுக்குள் உள்ளே போய்விடுவார். வழக்குகளை காவல் துறையினர் சந்திக்க வேண்டி இருக்கும். புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணங்கள் இன்றி  பிச்சைக்கார மாவட்டத்தை போல டெல்டா மாவட்டத்தை ஆக்கிவிட்டனர். அடிப்படை வசதிகளை கூட இந்த அரசு செய்து கொடுக்கவில்லை. அமைச்சர்கள் தவறான கருத்துகளை சொல்லி வருகின்றனர்.
தி.மு.க சார்பில் இதுவரை 10 கோடி மதிப்பிலான நிவாரண  பொருள்களை டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி உள்ளோம்" என்றார்.