Published:Updated:

“ஈழத்தமிழர்கள் காசு கொடுத்தால் நேசிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“ஈழத்தமிழர்கள் காசு கொடுத்தால் நேசிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்!”
“ஈழத்தமிழர்கள் காசு கொடுத்தால் நேசிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்!”

த.கதிரவன் - படங்கள்: பா.காளிமுத்து, தி.குமரகுருபரன்

பிரீமியம் ஸ்டோரி

ட்டு வழிச் சாலை விவகாரத்தில், நீதி மன்ற உத்தரவுப்படி சேலத்தில் தங்கியிருந்து, சென்னை திரும்பியிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைச் சந்தித்தேன்...

“ஈழத்தமிழர்கள் காசு கொடுத்தால் நேசிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்!”

“ ‘சீமான், உள்ளே போகவேண்டியவர்தான். சிறைக்குப் போய்வந்த பிறகுதான் அவர் அமைதியாக இருக்கிறார்’ என்கிறாரே ஹெச்.ராஜா?’’

“ சிறைக்குப் போவதற்கும், வழக்கைச் சந்திப்பதற்கும் அச்சப்படுகிற ஆட்களா நாங்கள்? தூத்துக்குடியில் நான் மக்களைச் சந்தித்த செய்திகளையெல்லாம் ஊடகத்தில் காட்டக்கூடாது என்று சிறப்பு உத்தரவே போட்டுவிட்டார்கள்; இணையத்தை முடக்கிவிட்டார்கள்.

இப்போதும்கூட மக்களை நாங்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது. ‘எட்டு வழிச்சாலைக்காக 90 விழுக்காடு மக்கள் தங்கள் விளைநிலத்தை விரும்பித் தந்துவிட்டார்கள்’ என்று முதல்வர் சொல்கிறார். விரும்பி நிலத்தைக் கொடுத்துவிட்ட மக்களை நாங்கள் போய்ச் சந்திப்பதில் ஏன் உங்களுக்கு அச்சம் வருகிறது? நான் மக்கள்கிட்ட நின்னு அவர்கள் கதறுவதைக் காட்டுகிறேன்... நீங்கள் மக்கள்கிட்ட நின்னு அவங்க விரும்பித் தர்றதை ஒருமுறை காட்டுங்களேன்!’’

‘`ஹெச்.ராஜா நடத்தும் ‘வேல் சங்கம’த்துக்கும், சீமானின் ‘வேல் பேரணி’க்கும் என்ன வித்தியாசம்?’’

“நாங்கள் இத்தனை ஆண்டுகளாக வேல் பேரணியை நடத்தியபிறகு, மக்கள் அனைவரும் எங்கள் பக்கம் திரும்புகிறார்கள் என்பதை அறிந்தபிறகுதானே... அவர்கள் முருகன் பற்றிப் பேசுகிறார்கள்... இது ஓட்டு அரசியல்!

‘ஆயுதபூஜை, சரஸ்வதிபூஜை, விநாயகர் சதுர்த்திக்கெல்லாம் விடுமுறை இருக்கும்போது ஏன் தைப்பூசத்துக்கு மட்டும் விடுமுறை இல்லை?’ என்று இவ்வளவு நாள்களாக நான் மட்டும்தான் கேட்கிறேன். வேறு யாருமே கேட்கவில்லையே.

நான் முப்பாட்டன் என்று சொல்வதற்கே கேலி செய்கிறார்கள். என் இன முன்னோரை நான் வேறு எப்படி அழைக்க வேண்டும்? உலகம் முழுக்க விநாயகரைக் கொண்டுபோன அளவுக்கு எங்கள் முப்பாட்டன் முருகனை அவர்கள் கொண்டுபோயிருக்கிறார்களா? திருத்தணியைத் தாண்டி அரை அங்குலம்கூடப் போகவில்லையே எங்கள் முப்பாட்டன்?’’

‘`கடந்த காலங்களில், பகுத்தறிவுப் பாதையில் பயணித்துவந்த நீங்கள் இப்போது, முப்பாட்டன் முருகனைப் பற்றியெல்லாம் பேசுவதும் ஓட்டு அரசியல்தானே?’’

“கட்சி ஆரம்பிக்கப் போகிறேன்... ஓட்டு அரசியலுக்கு வரப்போகிறேன் என்றெல்லாம் அப்போதே நான் நினைத்திருந்தால், ‘கடவுள் இல்லை, சாதி இல்லை’ என்றெல்லாம் பேசியிருக்க வேண்டியதேயில்லை. ஆக இந்தப் பணியைச் செய்யப்போகிறேன் என்பதே எனக்கு அன்றைக்குத் தெரியாது. காரணம்... பிணவறையில் பிரசவிக்கப்பட்டவர்கள் நாங்கள்!

“ஈழத்தமிழர்கள் காசு கொடுத்தால் நேசிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்!”

வேரை இழந்த மரமும் வரலாற்றை இழந்த இனமும் வாழாது. கிணற்றில் விழுந்துவிட்ட என் வீட்டு வாளியை எடுக்கத்தான் கிணற்றுக்குள் குதித்தேன். ஆனால், மூழ்கிப் பார்க்கும்போதுதான், என் பரம்பரையே உள்ளே கிடக்கிறது என்பது தெரிந்தது.

அந்த வகையில், 50 ஆயிரம் வருடங்களுக்கும் முந்தைய என் தேசிய இனத்துக்கான மெய்யியல் கோட்பாட்டை மீட்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. இதில், தனிப்பட்ட விதத்தில் எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா, வழிபடுகிறேனா... என்பதைப் பற்றியெல்லாம் பேசவேண்டியதில்லை!

தேசியத் தலைவர் பிரபாகரனுக்குக்கூடக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் போர்ச்சூழலிலும்கூட ஈழ மக்கள் வழிபடும்போது அதனை அவர் தடுக்கவும் இல்லை... தன் கருத்தைத் திணிக்கவும் இல்லையே!

கோயில் நுழைவுப் போராட்டம் குறித்துப் பேசும் பெரியாரும்கூட ‘கடவுள் இல்லை என்ற உணர்வு என்னுடையது. ஆனால், கடவுளை வழிபடக்கூடியவர்களுக்கு அவர்களது உரிமையைப் போராடிப் பெற்றுத்தருவதென்பது ஒவ்வொருவரின் கடமை’ என்றுதானே சொன்னார். அதைத்தான் நானும் செய்கிறேன். எனவே இது ஓட்டு அரசியல் இல்லை!’’

‘’கருணாநிதி குறித்து தொடர்ந்து அநாகரிகமான முறையில் நாம் தமிழர் கட்சியினர் விமர்சனம் செய்வதாகக் குற்றச்சாட்டு எழுகிறதே?’’


‘`என்னை, என் குடும்பத்தை, குறிப்பாக என் மனைவியைப் பற்றியெல்லாம்கூட அநாகரிகமான முறையில் தி.மு.க-வினர்தான் எழுதிவருகிறார்கள். ‘சீமான், சாலை விபத்தில் இறந்துவிட்டார்; மஞ்சள் காமாலையில் இறந்து விட்டார்’ என்று என் படத்தைப் போட்டே தி.மு.க-வினர்தான் இணையத்தில் செய்தி பரப்பி வருகிறார்கள்... இதோ என் அலைபேசியிலேயே பாருங்களேன்... (அலைபேசியில் வந்த முகநூல் செய்தியைக் காட்டுகிறார்)

இப்படி தொடர்ச்சியாக இழிவான செய்திகளையே பரப்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் என் தம்பிமார்களும் எவ்வளவு சகிப்பார்கள்? கண்ணியம் என்பது ஒரு பக்கம் மட்டும் என்பதில்லையே! ஆனாலும்கூட ‘நாகரிகமற்ற செய்திகளைப் பேசக்கூடாது’ என்று நாங்களே அறிக்கை கொடுக்கி றோம்... கண்டிக்கிறோம். ஆனால், தி.மு.க இதில் எதையுமே செய்வதில்லையே...’’

‘`ஈழத்தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெறும் முயற்சியாகத்தான் வைகோவைத் தெலுங்கர் என்று குறிப்பிடுவதாகச் சொல்கிறார்களே?’’


“வைகோவைத் திட்டிப் பேசவேண்டிய அவசியம் எனக்கு என்ன வந்திருக்கிறது... வைகோ, என் அரசியல் எதிரியா? அவரை எதிர்த்து அரசியல் செய்யவா இவ்வளவு கஷ்டப்பட்டு அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறேன் நான்? தி.மு.க- விலிருந்து வைகோவை நீக்கியபோது, ‘தலைவரைப் (பிரபாகரன்) பார்க்கச் சென்றதால்தான் நீக்கினார்கள்’ என்று ம.தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் நாங்கள். அப்பா மணிவண்ணன், மாமா எஸ்.எஸ்.சந்திரனையெல்லாம் ம.தி.மு.க-வில் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டதே நான்தான். அரசி யலுக்குள் வந்தபிறகு அவரவர் நிலைப்பாடுகளால் பிரிந்து வெகுதூரம் வந்துவிட்டோம், அவ்வளவுதான்.’’

‘`வெளிநாடு வாழ் தமிழர்களிடம் பொய்ப் பிரசாரம் செய்து நாம் தமிழர் கட்சி வசூல் வேட்டை நடத்துவதாக வைகோ கூறுகிறாரே?’’


“பதிலுக்குப் பதில் பேசிக்கொண்டிருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்? ஈழத் தமிழர்கள் பொய்ப் பிரசாரங்களை நம்பக்கூடியவர்களா? அவர் சொல்கிறபடியே எனக்குக் காசு கொடுக்கிறார்கள் என்றால்கூட, 30 வருடங்களாக உங்களுக்குக் கொடுக்காத காசை எனக்குக் கொடுக்கிறார்கள் என்றால், உங்களைவிட என்னை நேசிக்கி றார்கள், பெரிய தலைவராக நம்புகிறார்கள் என்றுதானே அர்த்தம்?

இதெல்லாம் சும்மா... யாரு கொடுப்பா... எப்படி வரும் காசு? உண்டியலா வருமா, காசோலையாக வருமா அல்லது வங்கியில் வந்து சேருமா? இது வைகோவின் பிரச்னை அல்ல... வருமானவரித்துறையின் பிரச்னை! அவ்வளவு பெரிய தலைவர் வைகோ இப்படிப் பேசியிருப்பது நன்றாக இல்லை.’’

‘`பிரபாகரனோடு நீங்கள் ஆமைக்கறி விருந்து சாப்பிட்டதாக வெளியாகும் செய்திகள் இணையதளங்களில் கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகிறதே?’’


“அண்ணனோடு அமர்ந்து நான் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று சொல்லவில்லை. ஆமைக்கறி, ஈழத்தில் பிரதான உணவு. நடேசன் அண்ணன், பூலித்தேவன், நிதித்துறைப் பொறுப்பாளர் மற்றும் சிலரோடு அமர்ந்து ஆமைக்கறி நான் சாப்பிட்டேன். அதில் சிலர் இப்போதும் உயிரோடு இருக்கின்றனர். அவர்களிடமே கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஈழத்துக்குப் பயணம் போனது நான்... அண்ணன் பிரபாகரனை சந்தித்தேன். அங்கே என்ன நடந்தது என்று நான் சொல்ல வேண்டும் அல்லது அண்ணன் பிரபாகரன் சொல்ல வேண்டும். நீங்களே பேசிக்கொள்வதென்பது அர்த்தமற்றது.’’

‘`நீங்கள் ஆமைக்கறி சாப்பிட்டது, ஏ.கே.74 துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகச் சொல்லும் செய்தியெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் என்கிறாரே கொளத்தூர் மணி?’’


‘`நான் இன்னும் அந்தக் காணொளியைப் பார்க்கவில்லை. ஆனால், பார்த்தவர்கள் சொன்னது, ‘இருந்திருக்குமா, நடந்திருக்குமா என்று தெரியவில்லை’ என்றுதான் அவர் சொல்லியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

நான் ஈழத்துக்குப் பயணம் போகும்போது, கொளத்தூர் மணி, காசி அண்ணன், பழநெடுமாறன் ஐயாவிடம் சொல்லிவிட்டுத்தான் போனேன். அங்கே எப்படிப் பயணித்தேன் என்பதெல்லாம் தனிக்கதை.

அப்போதே இதுகுறித்துப் பலமேடைகளில் அண்ணன் முன்னிலையிலேயே நான் பேசியிருக்கிறேன். எனவே, இத்தனை வருடங்கள் கழித்து இப்போது இதுபற்றிப் பேச வேண்டிய தேவை இல்லை!’’

‘` ‘மக்கள் நலக் கூட்டணியை விடவும் அதிகமாக நாம்தமிழர் கட்சி வாக்கு வாங்கவில்லையென்றால், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்துவிடுகிறேன்’ என்று சவால் செய்த நீங்கள் பின்னர் மாற்றிப் பேசியது உங்கள்மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிவிடாதா?’’

“அன்றைய தொலைக்காட்சி விவாதத்தில்,  ‘உங்கள் கட்சியைவிட அதிக வாக்குகள் வாங்குகிறேன்’ என்றுதான் சொல்லியிருக்கிறேன். மக்கள் நலக் கூட்டணி என்று நான் சொல்லவில்லை. நீங்கள் வேண்டுமானால், அந்தக் காணொளியைப் பாருங்கள்.

நான் மதிக்கக்கூடிய இடத்தில் இருப்பவர் அருணன். அன்றைக்கு அவர் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. பொதுவுடைமை, திராவிடர் இயக்கம் என அங்கிருந்துதான் நானும் வளர்ந்து வருகிறேன்.’’

‘`நடிகர் விஜய் படத்தை சீமான் இயக்குவதாக வெளிவரும் செய்திகள் உண்மையா... இயக்குநர் சீமானை எப்போது பார்க்கலாம்?’’

‘`விஜய்யை வைத்துப் படம் இயக்குவதற்கு முதலில் முயற்சி செய்தோம். ஆனால் அது சரிவரவில்லை. திரைப்படம் இயக்குவதாக இருந்தால், குறைந்தது 90 நாள்களை அதற்காகவே ஒதுக்கிப் பணி செய்யவேண்டும். அதற்கான சூழல் இப்போது இல்லை!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு