Published:Updated:

யாழ். பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் நடந்த மாவீரர் நாள்!

இரா.தமிழ்க்கனல்
யாழ். பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் நடந்த மாவீரர் நாள்!
யாழ். பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் நடந்த மாவீரர் நாள்!
யாழ். பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் நடந்த மாவீரர் நாள்!

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், இன்று காலை மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. 

ஈழத்தமிழர் தாயகப் பகுதியான இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில், நவம்பர் 21-ம் தேதி முதல் 27-ம் தேதிவரை மாவீரர் வாரமாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில், விடுதலைப்போராட்டத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுகூரும்வகையில், ஒரு வாரம் முழுவதும் மாவீரர்களின் வீரத்தைப் போற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். 

யாழ். பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் நடந்த மாவீரர் நாள்!

படங்கள் - நன்றி: குளோபல் தமிழ்

இந்த ஆண்டு மாவீரர் நாளையொட்டி, யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவுத்தூபி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் தோரணக் கொடிகள் கட்டப்பட்டு, நினைவுத்தூபியின் முகப்பும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 

யாழ். பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் நடந்த மாவீரர் நாள்!

இன்று காலை, யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் மாவீரர் தூபிக்கு மாலை அணிவித்து, மலர்வணக்கம் செய்தனர். 

முன்னதாக, யாழ் கோப்பாய் எனுமிடத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்தின் எதிரில் மாவீரர் நாளை கடைபிடிப்பதில், விடுதலைப்புலிகளின் சின்னங்கள், கொடியைப் பயன்படுத்தக் கூடாது என உள்ளூர் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. தடையை மீறி அங்கு மாவீரர் நாள் அனுசரிக்கப்படுவதைத் தடுப்பதற்காக, துயிலுமில்ல வட்டாரத்தில் இலங்கை ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். ராணுவத்தினரின் முன்னிலையில், துயிலுமில்லத்தின் எதிரில் இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம், இன்று காலையில் சுடரேற்றி மாவீரர்களுக்கு மரியாதைசெய்தார்.