இந்தியாவில் முதன்முறையாக... அண்ணா அறிவாலயத்தில்... ஸ்டாலினின் புதிய திட்டம்! | india's largest political flag post will be installed in anna arivalayam

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (27/11/2018)

கடைசி தொடர்பு:20:10 (27/11/2018)

இந்தியாவில் முதன்முறையாக... அண்ணா அறிவாலயத்தில்... ஸ்டாலினின் புதிய திட்டம்!

அண்ணா அறிவாலயம்

இந்தியாவில், இதுவரை எந்தக் கட்சியின் அலுவலகத்திலும் இல்லாத ஒரு திட்டத்தை தி.மு.க தலைமை செயல்படுத்த உள்ளது. ஆம், தேசியக் கட்சிகளின் அலுவலகத்தில்கூட இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கொடிக்கம்பத்தை தி.மு.க-வின் தலைமை அலுவலகத்தில் அமைக்க உள்ளனர். சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் 114 அடி  உயரமுள்ள கொடிக்கம்பத்தை மிகப் பிரமாண்டமாக நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இப்போது நடைபெற்றுவருகிறது. மறைந்த முன்னாள் தி.மு.க தலைவரும், ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியின் உருவச்சிலையை அறிவாலயத்தின் முன்பகுதியில் வைப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 

கருணாநிதியின் சிலை திறப்புவிழா,  டிசம்பர் 16-ம் தேதி அன்று மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு அகில இந்த அளவிலான கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள். சிலை திறப்பு விழாவுக்கு முன்பாகவே இந்த பிரமாண்ட கொடிக்கம்பப் பணிகளை முடித்து, அதில் தி.மு.க-வின் கொடியை ஏற்றிவிடும் முனைப்பில் தி.மு.க தலைமை உள்ளது. ஸ்டாலின் யோசனைப்படி இந்த கொடிக்கம்பத் திட்டம் உருவாகியுள்ளது. இந்தப் பணியை முன்னாள் சென்னை மாநகர மேயரும் சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியம் செய்துவருகிறார்.


[X] Close

[X] Close