Published:Updated:

கந்துவட்டிக்காக ஆளைக் கடத்திய போலீஸ் கான்ஸ்டபிள்...பீதியில் மதுரை மக்கள்!

கந்துவட்டிக்காக ஆளைக் கடத்திய போலீஸ் கான்ஸ்டபிள்...பீதியில் மதுரை மக்கள்!
கந்துவட்டிக்காக ஆளைக் கடத்திய போலீஸ் கான்ஸ்டபிள்...பீதியில் மதுரை மக்கள்!
கந்துவட்டிக்காக ஆளைக் கடத்திய போலீஸ் கான்ஸ்டபிள்...பீதியில் மதுரை மக்கள்!

மதுரை: பணத்துக்காக ஆளைக் கடத்திய கந்துவட்டி கும்பலையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த போலீஸ்காரரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பி இருக்கிறது கூடல்நகர் போலீஸ்!

கூடல் புதூரை சேர்ந்த கம்பராஜன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரிடம் கந்து வட்டிக்கு இரண்டு லட்ச ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் வட்டி கொடுக்க முடியாமல் சிரமப்பட்டவரை, ஜெயக்குமார் அவரது நண்பரான மதுரை ஆயுதப்படையில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் வெங்கடேஷ் மூலம் கடத்தி இருக்கிறார். கடந்த 27 ஆம் தேதி, போலீஸ் விசாரணைக்கு அழைத்துப்போவதாக கூறி, கம்பராஜனை காரில் கடத்தி ராஜபளையத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்திருக்கின்றனர்.

கணவர் வீடு திரும்பாததால் கலவரமடைந்த கம்பராஜனின் மனைவி ஜான்சிராணி, கூடல் புதூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். விசாரணையில், கம்பராஜனை ராஜபாளையத்தில் கடத்தி வைத்திருந்தது தெரிந்து அவரை மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட போலீஸ்காரார் வெங்கடேசனை முதல் குற்றவாளியாகவும், ஜெயக்குமாரை இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்த்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், மொத்தம் ஐந்து நபர்களை கைது செய்திருக்கிறார்கள். அதேநேரம், கடத்தலில் சம்பந்தப்பட்டது போலீஸ்காரர் என்பதால், யாருக்கும் தெரியாமல் அவர்களை காதுக் காதும் வைத்தாற் போல் கோர்ட்டுக்கு அழைத்து சென்றது கூடல்புதூர் போலீஸ்.

##~~##
இதே போல் இரண்டு நாட்களுக்கு முன்பு, காமராஜர் சாலையில் மெடிக்கல் நடத்தும் ஜனார்த்தனன் என்பவரை, இரவு கடையை அடைத்து விட்டு வரும்போது ஒரு கும்பல் கடத்தியது. அவரை எங்கோ ஒரு அறையில் அடைத்து வைத்து ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் குடும்பத்தினர், ஜனார்த்தனனை காணவில்லை என்று தெப்பக்குளம் போலீஸில் புகார் கொடுத்தார்கள். அதற்குள் கடத்தல் கும்பல் அவரை விட்டு விட, தெப்பக்குளம் போலீஸில் நேரில் வந்து ஆஜரானார். தற்போது கடத்தல் கும்பலை போலிஸ் தேடி வருகிறது.
 
மதுரை ஏரியாவில் கொஞ்ச நாட்களாக அடங்கிக் கிடந்த கடத்தல் சம்பவங்கள், மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருப்பதை அடுத்து, பொதுமக்களும் வியாபாரிகளும் பீதியடைந்து கிடக்கிறார்கள்!
-
கே.கே.மகேஷ், செ.சல்மான்