Published:Updated:

`என் பணியை இளைஞர்களை நம்பி விட்டுச் செல்கிறேன்’ - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உருக்கம்!

`என் பணியை இளைஞர்களை நம்பி  விட்டுச் செல்கிறேன்’ - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உருக்கம்!
`என் பணியை இளைஞர்களை நம்பி விட்டுச் செல்கிறேன்’ - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உருக்கம்!

ஐ.ஜி பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இன்று அவருக்கு ரயில்வே காவல்துறை சார்பில் பிரிவு உபசரிப்பு விழா நடத்தப்பட்டது. 

`என் பணியை இளைஞர்களை நம்பி  விட்டுச் செல்கிறேன்’ - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உருக்கம்!

சிலைத் தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் என்றால் தமிழகத்தில் தெரியாதவர்களே கிடையாது. சமீபத்தில் சிலை கடத்தலைத் தடுக்க இவர் காட்டிய அதிரடியால் மக்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்துவிட்டார். ஆனால், இவரின் அதிரடி நடவடிக்கை, தமிழக இந்து சமய அறநிலையத் துறையினருக்கு மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியினருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால்தான் இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் ஆர்வம்காட்டியதோடு ஆணையையும் பிறப்பித்தனர். நீதிமன்றம், ரயில்வே ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் மாற்றப்பட்டபோது சிலை வழக்குகளைப் பொன்.மாணிக்கவேல் விசாரிக்க நீதிமன்றம் தனி உத்தரவைப் பிறப்பித்தது. கற்சிலைகள் மட்டுமல்லாது தங்கச் சிலைகள், தங்கக் கோபுரங்கள் செய்ததில் நடந்த முறைகேடுகளையும் இவர் கண்டுபிடித்துள்ளார். 

`என் பணியை இளைஞர்களை நம்பி  விட்டுச் செல்கிறேன்’ - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உருக்கம்!

50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சொந்தமான ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகள், சமீபத்தில் குஜராத்திலிருந்து மீட்கப்பட்டது. ராஜராஜ சோழன் சிலையைக் கண்டுபிடித்து தஞ்சாவூருக்கு கொண்டுவந்த பொன்.மாணிக்கவேலுக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்தச் சிலை தஞ்சைப் பெரிய கோயிலுக்குக் கொண்டுவரப்படும்போது ஊர் மக்கள் அனைவரும் கூடி விழாவாகக் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஜி பொன்மாணிக்கவேலின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்த நிலையில் நாளையுடன் இவரின் பதவிக்காலம் முடிவடைகிறது. 

`என் பணியை இளைஞர்களை நம்பி  விட்டுச் செல்கிறேன்’ - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உருக்கம்!

இன்று சென்னை அயனாவரத்தில் ரயில்வே காவல்துறை சார்பில் இவருக்குப் பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஐ.ஜி தன்னுடன் சக காவலர்களாகப் பணியாற்றியவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அப்போது, `` ஒரு குற்றம் நடந்தால் அந்தப் பகுதியில் இறங்கி முழுமையாக விசாரிக்க வேண்டும். தவறு உறுதியானால் உடனடியாக நீதிமன்றத்தில் அனுமதி பெற்று கைது செய்ய வேண்டும். உடனடியாக கைது செய்யக் கூடிய சம்பவங்கள் மற்றும் சட்டங்களை அறிந்து காவலர்கள் செயல்பட வேண்டும். யார் மீதும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யக் காவலர்கள் பயப்படக்கூடாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் அளிக்கும் வாக்குமூலத்தை ஒரு காகிதத்தில் காவலர்கள் எழுத வேண்டும் அப்போது மட்டுமே அது சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படும்.

கைது செய்த குற்றவாளிகளை அடிப்பதால் அவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்க முடியாது. நான் கையாண்ட ஒரு வழக்கில் குற்றவாளியை அழைத்து எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த அதேபோல் இருக்கையை அவனுக்கும் கொடுத்தேன். எனக்கு அளித்த உணவு போன்ற அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்தேன். பிறகு அவன் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி இதனால் பிற்காலத்தில் கிடைக்கும் தண்டனைகள் பற்றி விளக்கி அவனுக்கு 15 நிமிடங்கள் கால அவகாசம் அளித்தேன். இதையடுத்து, அவனே தானாக வந்து தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டான். காவலர்கள் நினைத்தால் 6 மாதத்தில் ஒரு குற்றவாளியை திருத்த முடியும். போலீஸாருக்கு பெரும் கடமை இருக்கிறது. அதை உணர்ந்து அனைவரும் செயல்படவேண்டும். என்னுடைய பணியை நேர்மையான அதிகாரிகளையும், இளைஞர்களை நம்பி விட்டுச் செல்கிறேன் ’ என காவலர்கள் முன் உருக்கமாகப் பேசினார்.