Published:Updated:

ஆள் கடத்தல் வழக்கு: முன்ஜாமீன் கேட்கும் சாத்தூர் ராமச்சந்திரன்

ஆள் கடத்தல் வழக்கு: முன்ஜாமீன் கேட்கும் சாத்தூர் ராமச்சந்திரன்
ஆள் கடத்தல் வழக்கு: முன்ஜாமீன் கேட்கும் சாத்தூர் ராமச்சந்திரன்
ஆள் கடத்தல் வழக்கு: முன்ஜாமீன் கேட்கும் சாத்தூர் ராமச்சந்திரன்

ஆள் கடத்தல் புகாரின் பேரில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியை சேர்ந்த கோஷ், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட சீட்டு வாங்கித் தர கேட்டு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரனிடம் ரூ.32 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அவர் சீட்டு வாங்கி தராததோடு பணத்தையும் திருப்பி தரவில்லை என அருப்புக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கோஷ் திடீரென மாயமானார். இந்த நிலையில், கோஷை கண்டுபிடித்து தரும்படி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அவரது அண்ணன் மனைவி குருவம்மா  மனுத் தாக்கல் செய்தார்.

இதற்கிடையில் மதுரை அரசு மருத்துவமனையில் காயங்களுடன் கோஷ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, உயர் நீதிமன்ற கிளையில் மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், கிருஷ்ணன்கோவில் போலீசில் கோஷ் புகார் அளித்தார். அதில், கடந்த 14ஆம் தேதி தி.மு.க. பிரமுகர்கள் உதயசெழியன், மல்லி, ஆறுமுகம் ஆகியோர் வழக்கை வாபஸ் பெறும்படி முன்னாள் தி.மு.க. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்தின் தூண்டுதலின் பேரில் என்னை காரில் கடத்தி சென்று அடித்து உதைத்தனர் என்று கூறியிந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை வட்டாரம் தெரிவித்தது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மகன் ரமேஷ், உறவினர் சுப்பராஜ் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நேற்று மனுத் தாக்கல் செய்தனர்.

##~~##
இந்த மனுவில், "கோஷ் அளித்துள்ள புகாரின்பேரில் கிருஷ்ணன்கோவில் போலீசார் ஆள் கடத்தல், கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எங்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர். எங்கள் மீது குற்றம் சாட்டிய கோஷ் மீது ஏற்கனவே நிலஅபகரிப்பு, வேலை வாங்கி தருவதாக மோசடி, பணம் வாங்கி ஏமாற்றியது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
எங்கள் மீது வழக்குப்போட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். எனவே கீழ் நீதிமன்றத்தில் சரண் அடையும் வரை கைது செய்வதற்கு தடை விதித்து முன்ஜாமீன் அளிக்க வேண்டும்" என்று மனுவில் கூறியுள்ளனர்.