Published:Updated:

மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு போலீஸ் திடீர் தடை (படங்கள்)

மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு போலீஸ் திடீர் தடை (படங்கள்)
மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு போலீஸ் திடீர் தடை (படங்கள்)

விருதுநகர்: விருதுநகரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடைக்கு பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி போலீஸ் அனுமதி மறுத்து விட்டது.

மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு போலீஸ் திடீர் தடை (படங்கள்)

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரே நான்கு வழிச்சாலையை ஓட்டி தனியாருக்கு சொந்தமான இடத்தில் விருதுநகர் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் வரும் 6ஆம் தேதி நடத்த மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஏற்பாடு செய்து வருகிறார்.

இதற்கான நான்கு வழிச்சாலையை ஓட்டியுள்ள 3 ஏக்கர் பரப்பளவு உள்ள காலியிடத்தை சுத்தம் செய்து மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு போலீஸ் திடீர் தடை (படங்கள்)

இந்தநிலையில், விருதுநகர் தி.மு.க நிர்வாகிகள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு விருதுநகர் டி.எஸ்.பி. சுலைமானிடம் கடிதம் கொடுத்தனர். உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி அனுமதி தரப்படும் என்று டி.எஸ்.பி. சுலைமான் தெரிவித்தார்.

இந்த நிலையில், மேடை அமைக்கும் பணி ராத்திரி, பகலாக தீவிரமாக நடந்தது. இதற்கிடையே தி.மு.க நிர்வாகிகளை அழைத்த விருதுநகர் போலீசார், ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை நான்கு வழிச்சாலையின் சர்வீஸ் ரோட்டை ஓட்டியுள்ளது. பொதுக்கூட்டத்துக்கு வரும் வாகனங்களால் சர்வீஸ் ரோடு மற்றும் நான்கு வழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு போலீஸ் திடீர் தடை (படங்கள்)

மேலும் பொதுக்கூட்ட மேடைக்கு பின்புறம் ரயில்வே தண்டவாளம் உள்ளது. எனவே பொதுக்கூட்டத்துக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு தர முடியாது. எனவே சர்வீஸ் ரோட்டை ஓட்டியுள்ள இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தர முடியாது என்று கூறி விட்டனர்.

இதையடுத்து, மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி பாதியோடு நிறுத்தப்பட்டு விட்டது. விசயம் அறிந்த முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இந்த இடத்தில் மீட்டிங் நடத்தினால்தான் பெரிய அளவில் கூட்டம் காட்ட முடியும். எனவே மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்து பொதுக்கூட்டத்துக்கு அனுமதி பெறுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது தி.முக.

எம்.கார்த்தி

படங்கள்:
ஆர்.எம்.முத்துராஜ்