ஜெ. to அயோத்'தீ' - 5 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடன் 10 அம்சங்கள்! | highlights of this week junior vikatan

வெளியிடப்பட்ட நேரம்: 13:56 (05/12/2018)

கடைசி தொடர்பு:13:56 (05/12/2018)

ஜெ. to அயோத்'தீ' - 5 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடன் 10 அம்சங்கள்!

இந்த இதழ் ஜூனியர் விகடன்: https://bit.ly/2zDHkyX

'ஜெயலலிதாவின் கணக்கில் வராத பணம் முழுவதும், சசிகலாவின் உறவினர்களிடம்தான் இருக்கிறது' என்றும் ஒரு தரப்பினர் பேசுகிறார்களே? 

"இப்படிக் கேட்பதெல்லாம் பத்திரிகை தர்மமே கிடையாது. நாங்கள் அரசியலுக்கு வந்த நாளிலிருந்தே எங்களைப் பற்றித் தவறான தகவலைத்தான் எழுதுகிறீர்கள். இதுவும் முழுக்க முழுக்கப் பொய்யான குற்றச்சாட்டு." 

- 'ஜெ? - ஸ்லோ பாய்சன்... அடுத்த வாரிசு... ஆஸ்திக்கு அதிபதி...' - தினகரன் சிறப்புப் பேட்டியில் ஜெ., சசிகலா குறித்த சில முக்கிய சந்தேகங்களைக் களைகிறது.

"ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார்?"

"யாருடைய நடவடிக்கையும் அவருக்குப் பிடிக்கவில்லை. எங்கள் குடும்பத்திலும் அவர் யாரையும் விரும்பவில்லை. தனக்குப் பிறகு அ.தி.மு.க-வே இருக்கக் கூடாது என்று அவர் நினைத்தார்."

- "தனக்குப் பின் அ.தி.மு.க-வே இருக்கக் கூடாதென ஜெ. நினைத்தார்!" - திவாகரனின் அதிரடி பேட்டியோ வேறு கோணத்தைக் காட்டுகிறது.

24 மாநிலங்கள்... 207 சங்கங்கள்... லட்சக்கணக்கில் விவசாயிகள்... அதிர்ந்தது டெல்லி. தமிழக விவசாயிகளில் ஏழு பேர், திடீரென தங்களின் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாகத் தரையில் படுத்துப் போராட்டம் செய்தனர். சிலர் கண்ணீர் விட்டபடியே, "நமது கண்ணியத்தை இழக்க வேண்டாம்" என்றனர். அப்போது தமிழக விவசாயிகள், "எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். எங்களிடம் இருப்பது இந்த உயிர் மட்டும்தான்" என்றபோது சுற்றி நின்ற பிற மாநில விவசாயிகள் பலர் அவர்களைச் சூழ்ந்துநின்று நிர்வாணத்தை மறைத்தனர். - "அவமானப்பட வேண்டியது மத்திய அரசுதான்!" - டெல்லியைக் கலங்கடித்த விவசாயிகள் போராட்டம் குறித்த ரிப்போர்ட்டை தவறாதீர்கள்.

"சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு நீதித்துறையில் சிலர் ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் இருப்பதாக எடப்பாடி தரப்பு நினைக்கிறதாம். பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக நிறைய ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய எடப்பாடி அரசு தயாராகி வருகிறது" என்கிறார் மிஸ்டர் கழுகு. தினகரனின் அடுத்த மூவ் குறித்தும், ஸ்டாலின் டெல்லி லாபி பற்றியும் கூட விவரிக்கிறார். 'மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் டெல்லி லாபி செல்லுபடியாகுமா?' பகுதியின் இன்னும் விரிவாக அறியலாம்.

இந்த இதழ் ஜூனியர் விகடன்: https://bit.ly/2zDHkyX

"கருணாநிதி, மு.க.ஸ்டாலின்... கூட்டணிக் கட்சிகளை அனுசரித்து, அரவணைத்துச் செல்வதில் யார் கில்லாடி?"

"இரண்டாமவர், ஆரம்பிக்கவே இல்லையே."

இது மட்டுமா... "தற்போதைய அரசியல்வாதிகளில் மனபலம் அதிகம் உள்ளவர் யார்?" "இரட்டை வேடம் போடுகிறதா கேரள அரசு?" "தமிழகத்தில் தற்போது ஆட்சியைத் தக்கவைப்பது பணமா, விசுவாசமா?" என பல கேள்விகளுக்கு நச்சென இருக்கிறது 'கழுகார் பதில்கள்'.

"நீங்கள் என்னதான் நியாயப்படுத்தினாலும், கஜா புயலால் மிகப் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும்போது பிரதமர் வந்து பார்வையிட வேண்டியது அவரது கடமை இல்லையா?"

"நான் இல்லையென்று சொல்லவில்லை. அதே நேரம், அவர் எவ்வளவு பிஸியாக இருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும். பிரதமர் ஒன்றும் சும்மா இருக்கவில்லையே."

- "பிரதமர் பிஸி!" - காரணம் சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்புப் பேட்டியில் இது மட்டுமல்ல, டெல்லி போராட்டத்தில் தமிழக விவசாயிகள் நம் மானத்தை வாங்கிவிட்டதாக பொங்கும் அம்சங்களும் 'மிக முக்கியமானவை'.

"அரசாங்கங்கள் ஊழல் செய்யவும், தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணக் கொள்ளை அடிக்கவும் புற்றீசல்போல வேளாண் கல்லூரிகள் உருவாவது ஆரோக்கிய மானது அல்ல" - பெற்றோர்களையும் மாணவர்களையும் எச்சரிக்கிறது 'அய்யய்யோ அக்ரி கல்லூரிகள்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்...'. 

அயோத்தி அரசியல், மீண்டும் காட்சிக்கு வருவதற்குப் பின்னால், அப்பட்டமான அரசியல் நோக்கங்கள் இருக்கின்றன. 'Mandir before Mandate' என்பது, அறிவிக்கப்பட்ட நேரடி செயல்திட்டம். ஆனால், 'Mandir for Mandate' என்பதே அறிவிக்கப்படாத மறைமுகச் செயல்திட்டம். - உத்தவ் தாக்கரேவின் உத்திகளுடன் பாஜகவின் அணுகுமுறையையும் உள்ளடக்குகிறது "அயோத்'தீ' அரசியல் - உணர்ச்சி அரசியலின் வெறுப்பு கோஷங்கள்..!" எனும் அலசல் பார்வை.

கண்டதேவி தேர் விவகாரம், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் பிரச்னைகளில் கவனம் ஈர்த்த 'புதிய தமிழகம்' கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தற்போது, 'தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தேவேந்திரகுல வேளாளர்களை வெளியேற்றி, பிற்பட்ட சாதியினராக அறிவிக்க வேண்டும்' என்று வலியுறுத்தி வருகிறார். பி.ஜே.பி-க்கு ஆதரவாகவும் பேசிவருகிறார். அவர்மீது விமர்சனங்கள் அனல்பறக்கின்றன சூழலில் "சலுகை அல்ல... அடையாளமே முக்கியம்!" என்று வந்திருக்கும் ஜூ.வி. சிறப்புப் பேட்டி கவனிக்கத்தக்கது. 

ஆறு வயது பெண் குழந்தை அவள். அவளின் தாய், தன் குழந்தையை இன்னொருவரிடம் ஒப்படைக்கிறார். அழுது கொண்டே தாயைப் பிரிந்து செல்கிறது, அந்தக் குழந்தை. அவளின் தாயும் அழுதுகொண்டே அவளை வழியனுப்பி வைக்கிறார். இனி, அழுதுபுரண்டாலும் தன் அம்மாவைப் பார்க்க முடியாது, தாம் இன்னொருவருக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டோம் என்பது அந்தக் குழந்தைக்குத் தெரியாது... - உலகையே உலுக்கும் ஆஃப்கன் நிலை காட்டுகிறது 'விற்கப்படும் குழந்தைகள்! - வறட்சியின் கோரப்பிடியில் ஆஃப்கன்' கட்டுரை.

இந்த வார ஜூனியர்  விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2RFSp9G


[X] Close

[X] Close