Published:Updated:

அடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா?

அடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா?
பிரீமியம் ஸ்டோரி
அடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா?

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

அடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா?

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

Published:Updated:
அடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா?
பிரீமியம் ஸ்டோரி
அடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா?

#UrbanNaxals #MeTooUrbanNaxal #IAmUrbanNaxal

ஏ.எஸ் வசந்தகுமாரி,

அடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறையில் பணியாற்றியவர் பேராசிரியர் ஜி.என் சாய்பாபா. பழங்குடி மக்களுக்கு எதிரான  குற்றங்களை எதிர்த்துச் செயல்பட்டவர்.  90 விழுக்காடு செயல்படாத உடலையும், பல்வேறு உபாதைகளையும் கொண்ட மாற்றுத்திறனாளி . தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன்   தொடர்புகொண்டிருந்ததாகக்கூறிக் கைது செய்யப்பட்டார். சிறையிலிருக்கும் அவரை விடுவிக்கப் போராடிவரும் அவரின் மனைவி வசந்தகுமாரி, “ஆதிவாசிகளைப் பற்றி, அவர்களது உரிமைகளைப் பற்றி, சிறுபான்மையினரின் பாதுகாப்பைப் பற்றி யார் பேசினாலும், அவர்களுக்கு நக்சல் முத்திரை நிச்சயம். நானும் என் கணவரும்கூட அப்படித்தான்.  மாற்றுத்திறனாளியான என் கணவர் சாய்பாபா செய்த ஒரே விஷயம், நில உரிமைகள் பறிக்கப்பட்டுத் துன்புறுத்தப்படும் பழங்குடிகளுக்காகப் பேசியதுதான். கடைக்கோடி மனிதனின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாத இந்த அரசு,புத்தகம் வைத்திருப்பவர்களை யெல்லாம் கோழைத்தனமாகக் கைது செய்து கொண்டிருக்கிறது.”

கிரீஷ் கர்னாட், கன்னட எழுத்தாளர், திரைப்பட நடிகர்

அடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா?

“பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் அதற்கு எதிராகக் கலைத்துறையிலிருந்து எழுந்த முதல் குரல் என்னுடையது. படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் என் நண்பர்.  பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமானவர்கள்தான் தற்போதைய பீமா கோரேகான் பிரச்னைகளுக்கும் காரணமானவர்கள். அதனால், இவர்கள் குறிப்பிடும் அர்பன் நக்சல்களில் நானும் ஒருவன் என்பதைச் சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” 

அடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா?

அ.மார்க்ஸ், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்

“டிசம்பர் 31-ல் நடைபெற்ற ஒருங்கிணைப்பட்ட எல்கார் பரிஷத் (சமத்துவத்தை விரும்புபவர்களது பிரகடனம்) நிகழ்வில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இடதுசாரிகளும், செயற்பாட்டாளர்களும், அறிவு ஜீவிகளும் கலந்துகொண்டனர். கலந்து கொண்டவர்களுள் கைது செய்யப்பட்ட இந்த ஐவரும் அடக்கம். இடதுசாரிகளும், தலித்துகளும், அறிவுஜீவிகளும் கைகோப்பதை மனுதர்மத்தை விரும்புவர்கள் ஏற்கமாட்டார்கள் இல்லையா?”

அடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா?

உமர் காலித், மாணவர் சங்கத் தலைவர், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி.

“பா.ஜ.க ஆட்சியைக் கொஞ்சம் கூர்மையாகக் கவனித்து வரும் அனைவருக்கும் இது எளிதாகப் புரியக்கூடிய விஷயம்தான். மதமும் சாதியும் அவர்களது பிரித்தாளும் உத்திக்கான ஆயுதங்கள். இது அறிவிக்கப் படாத அவசரநிலை. இப்போது ஜனநாயகச் சக்திகள் ஒன்றுசேராவிட்டால், நாம் உயிர்களையும் உண்மையையும் இழந்துவிடுவோம்.”

அடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா?

பிரகாஷ்ராஜ், திரைக்கலைஞர்

“2014-ல் தொடங்கி அறிவுசார் மனிதர்களின் மீது நிகழ்த்தப்பட்ட  அத்தனை படுகொலைகளின் விசாரணைகளும் நேரடியாக இந்துத்துவா அமைப்புகளைச் சார்ந்த நபர்களைதான் சுட்டிக்காட்டுகின்றன.  ஆனால், ஆளுங்கட்சி அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் தைரியத்தில் சுதந்திரமாக உலவுகிறார்கள். கேள்வி கேட்கும் எங்களைப் போன்றவர்களை சீனா, பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்டிருப்பவர்கள், நக்சல்கள் என்று பட்டம் கட்டுகிறார்கள். கௌரி லங்கேஷ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், சுதந்திரதினவிழா அன்று பாகிஸ்தான் கொடியை ஏந்தி இந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த முனைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு இந்துத்துவவாதி. இவர்களைக் கேள்வி கேட்கும் நாங்கள் அர்பன் நக்சல்கள் என்றால், எங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் அச்சுறுத்தல் விடுக்கும் இவர்கள்  நகர்ப்புறக் கோழைகள் (Urban Cowards). எங்களுக்கு இவர்களிடம் அச்சமில்லை... அச்சமில்லை..அச்சமென்பதில்லையே!”

அடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா?

கஃபீல் கான், மருத்துவர்

மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த குழந்தைகளில் சுமார் 60 குழந்தைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு பலியாகின. அப்போது, தனி ஒருவனாக தன்னுடைய சுய முயற்சியால், வேறு சில இடங்களிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கொண்டு வந்து பல குழந்தைகளைக் காப்பாற்றினார் மருத்துவர் கஃபீல் கான். ஆனால், அவரும் ‘தேச விரோத’ முத்திரை குத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

“நான் முதலில் மனிதன். ஒவ்வொருவருக்கும் அடையாளத்தைக் கொடுத்து, அடையாளத்துக்கு ஏற்றவாறு அவர்களை அணுகும் வேலையைச் செய்கிறது ஆளும் அரசு. ஜனநாயகத்தைச் செத்துவிடாமல் காப்பாற்றுவதற்காக எல்லோரும் ஓர் அடி முன்னால் நகருங்கள். இந்த வேண்டுகோளில் எனது சொந்த அனுபவமும் துயரமும்கூட இருக்கிறது.”

அடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா?

ச. தமிழ்ச் செல்வன், எழுத்தாளர்

“மோடி அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் அடைந்துள்ள மோசமான தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக அறிவுஜிவிகளைக் கைது செய்யும் வேலை நடந்துள்ளதாக  முற்போக்கு எழுத்தாளர்கள் கருதுகிறோம்.”

தியாகு, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர்  

அடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா?

“இந்தியாவில் பல பகுதிகளில் மிகப்பெரிய போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன.  அமைதிவழியில் நடைபெறும் போராட்டங்களும் முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப் படுகின்றன. உதாரணத்துக்கு சட்டீஸ்கரில் ஹிமான்ஸு என்ற காந்தியவாதி  காந்திய வழியில் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளில் விரக்தி அடைந்த அவரே ஓர் இடத்தில், ‘இன்று உயிரோடு இருந்தால் காந்தியே ஆயுதத்தைத்தான் கையில் எடுப்பார்’ என்கிறார். அந்தளவுக்கு மோசமான ஒடுக்குமுறை நாடு முழுவதும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.”

புனிதப்பாண்டியன், ‘தலித் முரசு’ ஆசிரியர்

அடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா?

‘‘சுதந்திரப் போராட்டக் காலத்தில் மராத்திய பேஷ்வாக்கள் அங்கிருந்த தலித் மக்களைத் தீண்டாமையின் பெயரால் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி வந்தார்கள். தலித் மக்கள் பேஷ்வாக்களை எதிர்ப்பதற்கு ஆங்கிலேயப் படையுடன் இணைந்து போரிட்டார்கள். இதன் அடிப்படையிலேயே அங்கே ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் நாளில் மக்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்துகின்றனர். நாட்டின்  முதல் சட்ட அமைச்சரான அம்பேத்கர் ஒவ்வொரு வருடமும் அங்கு சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். ‘நாட்டின் விடுதலையைவிட சமூக விடுதலையே முக்கியம்’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். அதனால்தான் பீமா கோரேகான் போராட்டத்தில் தலித்துகளுக்கு ஆதரவாக ஆங்கிலேயர்கள் துணை நின்றதை அவர் ஆதரித்தார். தற்போது பீமா கோரேகான் பகுதியில் ஒன்றுகூடிய செயற்பாட்டாளர்களை அர்பன் நக்சல்கள் என்றும் தேசத் துரோகிகள் என்றும் கூறிக் கைது செய்வது அம்பேத்கரைக் கேள்விக்குள்ளாக்குவது ஆகாதா? அப்படியென்றால் அம்பேத்கரும் தேசத்துரோகியா?”

இந்தக் குரல்கள், ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுவதற்கு எதிரான குரல்கள்.

ஜோ.ஸ்டாலின்,  ஐஷ்வர்யா, ம.குணவதி

அடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா?

வானதி சீனிவாசன், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர்

“ஏ
ற்கெனவே நம் நாடு இரண்டு பிரதமர்களைத் தீவிரவாதத்துக்கு பலி கொடுத்துள்ளது. அதனால், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் தேவையானதுதான்.  வன்முறைச் செயல்களுக்குக் கருத்தியல்ரீதியாக உதவி செய்பவர்களையும், அவர்களைத் தூண்டிவிடுபவர்களையும் ஜனநாயக நாட்டில் எப்படிச் சுதந்திரமாக விட முடியும்? ஜனநாயகத்தில் எந்த மாதிரியான எதிர்க்கருத்துக்கும் இடம் உண்டு. ஆனால், ஆயுதத்தை ஏந்தி அதன்மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் சித்தாந்தத்தை அனுமதிக்க முடியாது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும், நேரடியாக ஆயுதம் எடுத்தவர்கள் அல்ல; ஆயுதம் எடுத்தவர் களுக்குப் பின்னால் இருந்து செயல்பட்டவர்கள்தானே தற்போது அந்த வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையில் உள்ளனர்?”