Published:Updated:

`தி.மு.க அணியில் எந்த நெருடலும் இல்லை!' - திருமாவளவனைச் சந்தித்த வைகோ பேட்டி

`தி.மு.க அணியில் எந்த நெருடலும் இல்லை!' - திருமாவளவனைச் சந்தித்த வைகோ பேட்டி
`தி.மு.க அணியில் எந்த நெருடலும் இல்லை!' - திருமாவளவனைச் சந்தித்த வைகோ பேட்டி

தி.மு.க அணியில் எந்த நெருடலும் இல்லை என வி.சி.க தலைவர் திருமாவளவனைச் சந்தித்த பிறகு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். 

பட்டியலின மக்களுக்கு அதிகாரப்பகிர்வு குறித்த கேள்வி ஒன்றுக்கு வைகோ அளித்த பதில் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. வைகோவின் கருத்து குறித்து வி.சி.கவின் பொதுச்செயலாளர்களின் ஒருவரான வன்னி அரசு கேள்வி எழுப்பியிருந்தார். இதனால், தி.மு.க-வுடன் நெருக்கமாக இருக்கும் ம.தி.மு.க மற்றும் வி.சி.க இடையே அசாதாரண சூழல் நிலவியது.

இந்த நிலையில், சென்னையில் வி.சி.க தலைவர் திருமாவளவனை, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, `தி.மு.க அணியில் எந்த நெருடலும் இல்லை. எங்களுக்குள் யாரும் சிண்டு முடிய முடியாது. காற்றுக்குள் பிரிவினை ஏற்படுத்த முடியாது. பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக ஒரு அலை வீசுகிறது. ஜனநாயகம் காக்கப்படும் என 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தேர்தல் முடிவுகள் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றன’’ என்றார். 


திருமாவளவன் கூறுகையில், `ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சூது, சூழ்ச்சி கள்ளம் இல்லாதவர். சாதி பாகுபாடின்றி அனைவருடனும் பழகுபவர். தி.மு.க கூட்டணி அமையும் முன், அது உடையும் என சிலர் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். என்னாலும் வைகோவாலும் தி.மு.க கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது’’ என்றார்.