Published:Updated:

பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு, துரத்தும் வழக்கு: விரக்தியில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.!

பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு, துரத்தும் வழக்கு: விரக்தியில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.!
பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு, துரத்தும் வழக்கு: விரக்தியில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.!

விருதுநகர்: தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் கொலை முயற்சி தூண்டுதல் வழக்கில் ஜாமீன் கிடைக்காமல் இருப்பதாலும் கடும் விரக்தியில் இருக்கிறார் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு, துரத்தும் வழக்கு: விரக்தியில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.!

விருதுநகரில் இம்மாதம் 6ஆம் தேதி தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்த முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஏற்பாடு செய்தார். விருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரே நான்கு வழிச்சாலையின் சர்வீஸ் ரோட்டை ஓட்டிய காலி இடத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான பிரமாண்ட மேடை அமைக்கும் பணி அசுர வேகத்தில் நடந்து வந்தது.

பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு, துரத்தும் வழக்கு: விரக்தியில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.!

மேலும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு உள்ளூர் தி.மு.க. நிர்வாகிகள் விருதுநகர் போலீசில் கடிதம் கொடுத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. நிர்வாகிகளை அழைத்த போலீசார் நான்கு வழிச்சாலையின் சர்வீஸ் ரோட்டை ஓட்டி பொதுக்கூட்டம் நடத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதனால் போதிய போலீஸ் பாதுகாப்பு தர முடியாது என்று சொல்லி கையை விரித்து விட்டனர்.

##~~##
இதை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் எதிரே பிரமாண்டமான அளவில் அமைக்கப்பட்டிருந்த தி.மு.க. மேடை அவசர அவசரமாக பிரிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டியை சேர்ந்தவர் ஜே.எம்.கோஸ். இவர் தி.மு.க.வின் முன்னாள் கிளைச்செயலாளர். கடந்த சட்டசபை தேர்தலின் போது ஸ்ரீவில்லிப்புத்து£ர் தொகுதியில் போட்டியிட சீட் வாங்கித்தருவதாக சொல்லி முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். 33 லட்சம் ரூபாய் வாங்கி விட்டு ஏமாற்றி விட்டார் என்று கடந்த 3 மாதத்திற்கு முன்பு அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தகவல் அறிந்து கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தலைமறைவாகி பிறகு மதுரை ஐகோர்ட் கிளையில் ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில் திடீரென்று தலைமறைவான கூமாப்பட்டி கோஸ் மதுரை அரசு மருத்துவமனையில் லேசான காயங்களுடன் சிகிச்சைக்கு சேர்ந்தார். பிறகு முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தூண்டுதலின் பேரில் தி.மு.க. நிர்வாகிகள் சிவகாசி உதயசூரியன், மல்லி ஆறுமுகம் ஆகியோர் தன்னை பெங்களூருக்கு கடத்தி சென்று வழக்கை வாபஸ் வாங்கும்படி கொலை மிரட்டல் விடுத்து அடித்து துன்புறுத்தினர் என்று மதுரை ஐகோர்ட் கிளையில் புகார் மனு தாக்கல் செய்தார். உடனே புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.
பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு, துரத்தும் வழக்கு: விரக்தியில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.!
இதையடுத்து கடந்த 28ஆம் தேதி கிருஷ்ணகோவில் போலீசார் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., உதயசூரியன், மல்லி ஆறுமுகம் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தகவல் அறிந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். உள்பட 3 பேரும் தலைமறைவாகினர்.
இதையடுத்து கடந்த ஏப் 29ஆம் தேதி கே.கே.எஸ்.எஸ்.ஆரின் மகன் ரமேஷ் மதுரை ஐகோர்ட் கிளையில் பதில் மனு தாக்கல் செய்தார். முன்னாள் தி.மு.க. நிர்வாகி கூமாப்பட்டி ஜே.எம்.கோஸ் பணம் பறிக்கும் நோக்கத்துடன் தனது தந்தை மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். எனவே இந்த வழக்கில் எனது தந்தைக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை நீதிபதிகள் ஸ்ரீவில்லிப்புத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண் அடைந்து விட்டு அதற்கு பிறகு ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில்தான் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்து விட்டது. சில லட்சங்கள் செலவு செய்து பிரமாண்டமாக அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடையும் பிரிக்கும் நிலை ஏற்பட்டு விட்டதை நினைத்து சோதனை மேல் சோதனை போதுமடா சாமி? என்ற ரீதியில் முக்கிய கட்சி நிர்வாகிகளிடம் புலம்பி வருகிறாராம் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
இதைத்தான் மத்தவுங்களுக்கு வந்தா தக்காளி சட்னி, நமக்கு வந்தா ரத்தம்ன்னு சொல்வாங்களோ?
எம்.கார்த்தி
படங்கள்:
ஆர்.எம்.முத்துராஜ்