பொம்மையா முருகன்
அடுத்து, ஆளும் அரசின் தொடர் மின்வெட்டைக் கண்டித்து முதல்வர் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார் என அராஜக தி.மு.க-வுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Rajagopal Subramaniam
‘வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசித் தேடிவருகிறார்கள்’ என்பது ஒரு நியூஸ் டெம்ப்ளேட், அவ்வளவுதான். அதுக்காக போலீஸ் வலையை வச்சுக்கிட்டா திரிவாங்க? தனிப்படை, வழக்கு எல்லாம் பொதுமக்களைத் திருப்திப்படுத்த மட்டும்தான். பேக்கரி டீலிங்லாம் டாப் லெவல்ல முடிஞ்சுருக்கும்.

Karthik Karthik
மக்கள் கேட்க நினைத்த கேள்வியைத்தான் அந்த ஆட்டோ டிரைவர் கேட்டார். அவர் சாமான்யன் என்பதால் அதிகம் கவனிக்கப்படவில்லை. அதே கேள்வியை ஒரு பிரபலம் கேட்டிருந்தால் வைரலாகியிருக்கும். அவர் வீட்டில் ரெய்டும் நடந்திருக்கும்! தன்னை அடித்த கட்சிக்காரர்கள் தன் வீடுதேடி வந்தபோது வரவேற்றதுதான் இந்த மண்ணின் பண்பாடு. ஆனால், தமிழிசையால் ஸ்வீட் கொடுக்க முடிந்ததே தவிர, பதில் கொடுக்க முடியவில்லை. தேர்தல் வரும்போது விஸ்வரூபம் எடுக்கும் அதே கேள்வி!

மாயோன்
எடப்பாடி, ஓ.பி.எஸ் போன்ற அடிமைகள், ஜெயலலிதாவை மறந்துபோவதில் ஆச்சர்யமில்லை. ஜெ. போட்டோக்களை போஸ்டர்களில் குறைத்துத் தங்களுக்குப் பெரிய கட்அவுட் வைத்துக்கொள்வதுகூட ஆச்சர்யமில்லை. ஆனால், தி.மு.க-வில் சொந்த மகன் கட்சித் தலைவராக இருக்கும்போதே, கருணாநிதியின் போட்டோ ஸ்டாம்ப் சைஸில்கூட இல்லாமல் போஸ்டர் வருவதுதான் ஆச்சர்யம்.

Sundar Rajan
கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து கடந்த மூன்று மாதங்களில் ஒரு யூனிட் மின்சாரம்கூட வரவில்லை - தமிழக அரசு

இதை நாங்க எப்பவோ சொல்லிட்டோம் - மக்கள்

Abdul Hameed Sheik Mohamed
ஜெயலலிதா சசிகலாவை போயஸ் கார்டனைவிட்டு அனுப்பி, மறுபடி சேர்த்து, மறுபடி வெளியேற்றி... தீபா கார் டிரைவர் ராஜாவைக் கட்சியை விட்டு வெளியேற்றி, மறுபடி சேர்த்து, மறுபடி வெளியேற்றி... வரலாறு இப்படியே போய்க்கிட்டு இருந்தா இதற்கெல்லாம் ஒரு முடிவு வேணாமா?

Swara Vaithee
இன்னைக்கு பெட்ரோல் போடப் போனப்ப, ‘‘என்ன ஜீ, அந்த பெட்ரோல் பங்க்லலாம் லிட்டர் நூறு ரூவாய்க்கு வித்துக்கிட்டு இருக்கான். நீங்க இன்னும் 88-லயே இருக்கீங்க’’ன்னு கேட்டுட்டு வந்துட்டேன்.

# இந்தியாவோட வளர்ச்சில நமக்கும் பங்கு இருக்குல்ல!

Mani Dhanuskodi
வண்டி சாவியை வண்டியிலிருந்து எடுக்க மறந்துட்டேன். வண்டி அங்கிட்டே இருக்கு... பெட்ரோல் மட்டும் திருட்டுப் போயிருக்கு!

# வாழ்க மோடிஜி!

Ravi Kumar
காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியை மக்கள் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைக்கலாமா?

மன்னை முத்துக்குமார்
பைக்கில் பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - உயர் நீதிமன்றம்.

# இனி யாரும் யாருக்கும் அவசரத்துக்கு லிஃப்ட் கொடுக்க முடியாது.

@Srinivtwtz
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சி.சி.டி.வி காட்சிகள் அழிந்துவிட்டன.

# ஜெயலலிதாவையே அழிச்சிட்டீங்க. சி.சி.டி.வி எம்மாத்திரம்?

@ajay_aswa
கொத்தடிமைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம் - ஓ.பி.எஸ்

# பாவம், அந்த விஷயத்தில் ரொம்பப் பாதிக்கப்பட்ட முதல் நபரே இவருதான். அதான் ஃபீல் பண்ணி பேசுறாரு!

@kumarfaculty
அரசு அலுவலகங்களுக்கு அருகில் இருக்கும் டீக்கடைகள், பெட்டிக்கடைகள், பேக்கரிகள் எல்லாம் பணப் பரிவர்த்தனை மையங்கள்!

@SyedSubahan8
இந்தியாவிலேயே, ஏன்... வேர்ல்டுலயே ஒரு ஆளுங்கட்சி போராட்டம் பண்றது நம்ம எடப்பாடியால மட்டும்தான் முடியும்!

@desh_bhaktha
ஒருவேளை இப்படி கோஷம் போடுவாங்களோ!

‘‘தடுக்காதே… தடுக்காதே… ஊழல் செய்வதைத் தடுக்காதே!’’
‘‘புடிக்காதே… புடிக்காதே… எங்கம்மாவுக்கு தடுத்தா புடிக்காதே!’’

@HAJAMYDEENNKS
பா.ம.க மாநிலத் துணைத் தலைவராக நடிகர் ரஞ்சித் நியமனம்

# ‘‘நடிகர்கள் பின்னாடி போகாதீங்க’’ன்னு சொன்ன அன்புமணியிடம் மைக்கைக் கொடுங்க!

@drkvm
பெட்ரோல் விலை பற்றிக் கேட்டவருக்கே இந்த ‘அடி’ன்னா... ரஃபேல் விமானம் பற்றிக் கேட்டால்?

@sultan_Twitz
ஜி.எஸ்.டி., முத்தலாக் உள்ளிட்ட பிரச்னையை முதன்முதலில் எதிர்த்த இயக்கம் அ.தி.மு.க-தான் - தம்பிதுரை

# அப்பறம் வேற வழியில்லாம சி.பி.ஐ ரெய்டுக்கு பயந்து ஒத்துக்கிட்டோம்!

@pachaiperumal23
தீபாவளிக்கு ஸ்வீட் இலவசமாக வேண்டுமா? டாக்டர் தமிழிசை மேடத்திடம் பெட்ரோல் விலையைக் குறைக்கச்சொல்லுங்கள்... வீடு தேடிவந்து தருவார்கள்!

@naatupurathan
கலைஞர்: என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...
எம்.ஜி.ஆர்: என் ரத்தத்தின் ரத்தங்களே...
பா.ஜ.க: என் இனிய நீல்கமல் சேர்களே...

@shivaas_twitz
அந்த ஸ்வீட்டுக்கு பதிலா ரெண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கிக் கொடுத் திருந்தாலாவது இந்த சந்திப்பில் ஓர் அர்த்தம் இருந்திருக்கும்..!

@abuthahir707
தி.மு.க-வுக்கு எதிராக வரும் 25-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டனப் பொதுக்கூட்டம் - எடப்பாடி
# எடப்பாடி மைண்டு வாய்ஸ்: ஆட்சி என் கையில இருந்தா, நான் ஏன் போராட்டம் பண்ணப் போறேன்?

@Akku_Twitz
சட்டமன்றத்தில் நான் அமைச்சர்; மருத்துவமனையில் நான் டாக்டர் - அமைச்சர் விஜயபாஸ்கர்
# மக்கள் மனதில் குட்கா வியாபாரி

@senthazalravi
காவல்துறை அறிவித்துள்ள இரண்டு தனிப்படைகள் தங்கள் நேரத்தை வீணடிக்காமல் ஒரு காரியம் செய்யலாம்.

ஒரு தனிப்படை ஒளிந்துகொள்ளலாம். இன்னொரு தனிப்படை அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவுட் ஆக்கலாம். அனைவரும் அவுட் ஆனபின், முதல் தனிப்படையினர் ஒளிந்துகொள்ளலாம்.

ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி