பா.ஜ.க செல்வாக்கை இழந்துவிட்டது! - ரஜினி டாக் | Rajni speaks about five state election result

வெளியிடப்பட்ட நேரம்: 00:21 (12/12/2018)

கடைசி தொடர்பு:07:52 (12/12/2018)

பா.ஜ.க செல்வாக்கை இழந்துவிட்டது! - ரஜினி டாக்

'10 பேர் ஒன்று சேர்ந்து ஒருவருக்கு எதிராக யுத்தத்துக்குப் போனால், பலசாலி 10 பேரா? அல்லது அந்த ஒருத்தரா?' என்று கூறி பா.ஜ.க மற்றும் மோடிக்கு ஆதரவாகக் கருத்துக் கூறியிருந்த ரஜினி தற்போது ஐந்து மநிலத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தன் நிலைப்பாட்டை மாற்றி 'பா.ஜ.க தனது செல்வாக்கை இழந்துவிட்டது' என்று கூறியிருக்கிறார்.

ரஜினி


தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் பா.ஜ.க தோல்வியைத் தழுவியிருக்கிறது. இவற்றில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று மாநிலங்களுமே பா.ஜ.கவுக்கு செல்வாக்கு மிகுந்த மாநிலங்களாகப் பார்க்கப்பட்டன. 

ஆனால், மூன்றிலுமே பா.ஜ.க தோல்வியடைந்து பெரும் பின்னடைவைச் சந்தித்து ஆட்சியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு எதிரான நிலை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, பொருளாதாரக் கொள்கைகள் உள்ளிட்ட தவறான நடவடிக்கைகளால் தான் பா.ஜ.கவுக்கு தோல்வியைத் தேடித் தந்திருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. ராஜஸ்தானில் அமைச்சர்கள் பலர் படுதோல்வியடைந்திருக்கும் சம்பவம் பா.ஜ.க தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தும் பா.ஜ.க-வின் தோல்வி குறித்தும் ரஜினியிடம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ``இந்தத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் சந்தேகமே இல்லை. பா.ஜ.க தனது செல்வாக்கை இழந்துவிட்டதைக் காட்டுகிறது" என்று பதில் அளித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க