இது மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய ‘அடி’ - ஸ்டாலின் விளாசல்! | Stalin speaks about elections results

வெளியிடப்பட்ட நேரம்: 06:09 (12/12/2018)

கடைசி தொடர்பு:08:15 (12/12/2018)

இது மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய ‘அடி’ - ஸ்டாலின் விளாசல்!

``ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வுக்கும், மோடிக்கும் கிடைத்த பலத்த அடி, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று மோடி கூறியது ஆணவத்தின் உச்சகட்டம்" என்று ஸ்டாலின் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.  

ஸ்டாலின்



அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியதாவது... ``என்னைப் பொறுத்தவரை இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் ஒரு மினி பாராளுமன்றத் தேர்தல் போன்றது. எனவே, இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று இருக்கக்கூடிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தி.மு.க-வின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். 

மோடி

ஐந்து மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கும் வெற்றியானது வர இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு முழுமையான வெற்றியாக வரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாகப் பா.ஜ.க-வின் கோட்டையாக விளங்கிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த வெற்றி என்பது பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய ‘அடி’. வளர்ச்சி இந்தியாவை உருவாக்கப் போகிறேன் என்று சொன்னார். ஆனால், எதுவும் உருவாக்கப்படவில்லை, அதுமட்டுமல்ல காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கப்போகிறேன் என்று சொன்னார். இது மோடியின் ஆணவத்தினுடைய உச்சகட்டம்.

ஸ்டாலின்

அவர் அப்படிச் சொன்ன காரணத்தால் இப்பொழுது நாங்கள் பா.ஜ.க இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று எந்தக் காரணத்தைக் கொண்டும் சொல்ல மாட்டோம். முறையாக வர இருக்கக்கூடிய தேர்தலில் மதவாதம் பிடித்திருக்கக் கூடிய ஆட்சியை ஒழிப்பதற்கு வேற்றுமை இல்லாத, மோதல் இல்லாத, மதவாதம் இல்லாத ஒரு ஆட்சியை உருவாக்குவதற்கு முயல்வோம்" என்று ஸ்டாலின் தெரிவித்தார். 

முன்னதாக தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தெலங்கானா ரஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு, அதன் தலைவரும் அம்மாநில முதல்வருமான சந்திரசேகரராவை தொலைபேசியில் தொடர்புகொண்டு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க