Published:Updated:

எட்டு வழிச்சாலை... உண்மையை மறைக்கிறதா அரசு?

எட்டு வழிச்சாலை... உண்மையை மறைக்கிறதா அரசு?
பிரீமியம் ஸ்டோரி
News
எட்டு வழிச்சாலை... உண்மையை மறைக்கிறதா அரசு?

சூழல்

பிரதமரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகச் சமீபத்தில் ஐந்து செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட விஷயம் இந்தியா முழுவதும் போராடும் மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றம் தலையிடும் அளவிற்குத் தேசிய அளவில் இந்த விஷயம் விவாதத்திற்குள்ளானது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே மற்றுமொரு சர்ச்சை தமிழகத்திலிருந்து கிளம்பி பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் 8-ம் தேதி சென்னை–சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளைச் சந்திப்பதற்காகத் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே இருக்கும் கிராம மக்களைச் சந்திக்கச் சென்ற ஸ்வராஜ் இந்தியா இயக்கத்தின் தேசிய தலைவர்  பேராசிரியர் யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்ட சம்பவம், இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழவே, பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து போலீசரால் கைது செய்து விடுதலை செய்யப்பட்ட பேராசிரியர் யோகேந்திர யாதவ், தன் குழுவினருடன் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

எட்டு வழிச்சாலை... உண்மையை மறைக்கிறதா அரசு?

அப்போது அவர் பேசும்போது, “சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை திட்டம் பற்றிய எந்தத் தகவல்களும் பொதுவெளியில் இல்லை. இது பொதுநலன் சார்ந்து இல்லாமல் தனியார் நலன் சார்ந்து இருக்கிறது. இது உள்ளூர் பகுதிகளுக்கான வளர்ச்சி திட்டமாகத் தெரியவில்லை, நகர்புறத்தில் இருக்கிற சிலரின் வளர்ச்சிக்கான திட்டமாகத்தான் தெரிகிறது. மாநில அரசு மிகவும் பதற்றத்துடன் இருக்கிறது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் முதலமைச்சர் அலுவலகம் களத்தில் நடப்பதைப் பற்றித் தகவல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதில் ஏதோ ஒரு விஷயம் மறைக்கப்படுவதாகவே தெரிகிறது. என் கண்களாலே பார்த்தேன். தமிழ்நாடு போலீஸ்தான் அரசு என்பது உறுதியாக தெரிகிறது.

நான் இந்தியா முழுவதும் சென்று விவசாயிகளைச் சந்தித்து அரசுக்கு எதிராகப் போராடியிருக்கிறேன். அங்கெல்லாம் போராட்டங்களுக்கும் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்படும். ஆனால், பேசுவதற்கே தடை விதிக்கப்படுவது தமிழ்நாட்டில்தான் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருக்கிற ஒரு பொம்மை அரசு யாரால் இயக்கப்படுகிறது என்பது மக்களுக்குத் தெரியும். காவல்துறையினரை ஒரு தனியார் ராணுவம்போல வைத்துக்கொண்டு சிலரின் கார்ப்பரேட் நலனுக்காக இந்த அரசு வேலை செய்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எட்டு வழிச்சாலை... உண்மையை மறைக்கிறதா அரசு?

இறுதியாக நாங்கள் கோருவது முதலில் சட்டத்தின் ஆட்சியை நடத்துங்கள். இரண்டாவதாக இத்திட்டம் தொடர்பாக வெளிப்படைத்தன்மை வேண்டும். அனைத்துத் தகவல்களும் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். மூன்றாவது மக்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்பது கோரிக்கை மட்டுமல்ல; அது சட்டப்பூர்வ தேவையும்கூட. ஆனால், அது செய்யப்படவில்லை. நான்காவது ஜனநாயகப்பூர்வ விவாதத்தை அனுமதியுங்கள். மக்களிடம் இந்தத் திட்டத்தைப் பற்றி எடுத்துச் சொல்வதற்கு, ஒருவருக்குச் சகல உரிமையும் உண்டு. ஐந்தாவது உள்ளூர் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் ஒருபக்க சார்பாகச் செயல்படக் கூடாது. அவர்களுடைய கடமை சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதுதான் வியாபார நோக்கங்களுடன் செயல்படுவர்களுக்கு உதவுவது அல்ல. மேலும் சட்டத்தின் ஆட்சியை விரும்பும் அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் ஒன்றிணைந்து வர வேண்டும். இந்த விஷயம் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். இந்த ஐந்து அடிப்படையான கோரிக்கைகளும் நிறைவேறும் வரை இந்தத் திட்டம் தொடர்பான அனைத்து பணிகளும் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்” என்றார் உறுதியான குரலில்.

எட்டு வழிச்சாலை... உண்மையை மறைக்கிறதா அரசு?

எட்டு வழிச்சாலை திட்டம் குறித்து மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் சுற்றுச் சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன், “2015-ம் ஆண்டிற்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய திட்டங்கள் அனைத்தையும் சாலை திட்டமாகப் பார்க்காமல், ஒரு பொருளாதார மண்டலமாகப் பார்க்க ஆரம்பித்துள்ளனர். 2015-ம் ஆண்டிலிருந்து நவம்பர் 2017 வரை சென்னை–சேலம் எட்டு வழிச்சாலை என்கிற திட்டமே இல்லை. 8-2-2018 அன்று நிதின் கட்கரி வெளியிட்ட செய்திக்குறிப்பில்கூடச் சென்னை–பெங்களூரு திட்டம்தான் இருந்ததே தவிரச் சென்னை-சேலம் திட்டம் பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை. 19-2-2018 அன்று ஃபீட்பேக் அல்ட்ரா என்கிற தனியார் நிறுவன அதிகாரிகள், டெல்லியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தைச் சந்திக்கின்றனர். பிப்ரவரி 22-ம் தேதி அந்த நிறுவனத்திற்கு ஒரு புதிய ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. அதில் அமைச்சரவைக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சென்னை–மதுரை திட்டம் கைவிடப்பட்டு, சென்னை–சேலம் திட்டம் புதிதாக இணைக்கப்பட்டது. ரூ.2,000 கோடிக்கு மேல் உள்ள எந்த ஒரு திட்டத்திற்கும் தமிழக அமைச்சரவை கூடி ஒப்புதல் அளிக்க வேண்டும், அது நடைபெறவில்லை. 19-ம் தேதி சந்தித்து 22-ம் தேதியே திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. தமிழக முதல்வர் பிப்ரவரி 25-ம் தேதி இதைப் பற்றிப் புதிதாக அறிவிப்பை வெளியிடுவதைப்போல ஏற்கெனவே கையெழுத்தான திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தில் ஒரு அவசரத்தன்மை தெரிகிறது. இதை நிறைவேற்ற பல சட்டங்களையும் மீறியிருக்கிறது அரசுத் துறைகள்” என்றார்.

எட்டு வழிச்சாலை... உண்மையை மறைக்கிறதா அரசு?

எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்திரகுமார், “சென்னையிலிருந்து சேலத்திற்குச் செல்ல பல சாலைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். எங்கள் அறிவுக்கு எட்டியவரை இந்தத் திட்டம் இந்த நாட்டினுடைய கனிம வளத்தைக் கொள்ளையடிக்கத்தான் கொண்டு வரப்படுகிறது. இந்தத் திட்டத்தில் வேறொன்றுமே இல்லை. இந்தச் சாலை திட்டத்தால் ஏற்படும் நன்மை குறித்து முதல்வர் விவாதிக்கத் தயார் என்றால், நாங்களும் தயார். கிராமங்களில் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் ஒரு மோதல் போக்கை உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. எந்தப் போராட்டத்தையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்றால், அதற்குக் காவல்துறையின் உதவித் தேவை. ஆனால், நாங்கள் அதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” என்றார் உறுதியாக.

எட்டு வழிச்சாலை... உண்மையை மறைக்கிறதா அரசு?

இந்தச் சந்திப்பின்போது ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தமிழகத் தலைவர் கே.பாலகிருஷ்னன், அருள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

- மோகன்.இ, படங்கள்: பா.கார்த்திகா