Published:Updated:

3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப்! - ராகுலின் செம்ம ஐடியா

3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப்! - ராகுலின் செம்ம ஐடியா
3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப்! - ராகுலின் செம்ம ஐடியா

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் மூன்று மாநிலங்களில் அதிக பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தாலும் மற்ற மூன்று மாநிலங்களின் வெற்றியைக் கொண்டாடி தீர்த்து வருகின்றனர் அக்கட்சியின் தொண்டர்கள்

3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப்! - ராகுலின் செம்ம ஐடியா

கடந்த வருடம் டிசம்பர் 11-ம் தேதி, ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் என ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் டிசம்பர் 16-ம் தேதி காங்கிரஸின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். ராகுல், காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுச் சரியாக ஒரு வருடத்தில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகின. இந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் ராகுல் காந்தி. காங்கிரஸின் வெற்றி அவர்களுக்குக் கிடைத்தது இல்லை, பணமதிபிழப்பு, ஜி.எஸ்.டி, மாநில அரசை மதிக்காத மத்திய அரசு, மதம் ரீதியான பிரச்னை போன்ற  பா.ஜ.க-வின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியின் வெளிப்பாடு எனப் பல கருத்துகள் உலாவந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும் இந்த ஐந்து மாநிலத் தேர்தலுக்கு ராகுல் காந்தியும் காங்கிரஸும் கடுமையாக உழைத்துள்ளனர்.

3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப்! - ராகுலின் செம்ம ஐடியா

நடந்து முடிந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரத்தைவிடவும் ராகுல் காந்தியின் பிரசாரத்துக்கு அதிக வெற்றி விகிதம் கிடைத்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வு, ரஃபேல் போர் விமான விவகாரம், கேஸ் மானியம், நீரவ் மோடி, விஜய் மல்லையாவின் மோசடி போன்றவற்றை மையமாக்கி தன் பிரசாரத்தில் பெரும் வெற்றி பெற்றார் ராகுல் காந்தி. மேலும், சமூக வலைதளங்கள் மூலம் பா.ஜ.க-வின் செயலை அதிகம் தோலுரித்துக் காட்டியது காங்கிரஸ். 

3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப்! - ராகுலின் செம்ம ஐடியா

ஐந்து மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தொழில் நுட்பம் மற்றும் சமூக வலைதளங்களில்தான் காங்கிரஸ் அதிக கவனம் செலுத்தியது. எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் அனைத்து சமூக வலைதள கணக்குகளையும் வைத்திருக்க வேண்டும் என்றும் அதில் குறைந்தது 1000 பேராவது, வேட்பாளரைப் பின் தொடர வேண்டும் போன்ற பல விதிமுறைகளை அடுக்கியது காங்கிரஸ் தலைமை. இதன் எதிரொலியாகப் பா.ஜ.க-வின் இதயத்துடிப்பாக இருந்த மத்தியப்பிரதேசத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவு பெரும் வெற்றி பெற்றது காங்கிரஸ்.

3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப்! - ராகுலின் செம்ம ஐடியா

தற்போது இந்த மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும் அங்கு யார் முதல்வர் என்ற போட்டி காங்கிரஸ் நிர்வாகிகளிடையே நிலவி வருகிறது. சத்தீஸ்கரில் பூபேஷ் பாகல், டி.எஸ்.சிங் தியோ மற்றும் தம்ராத்வாஜ் சாஹு ஆகியோர் முதல்வர் பதவிக்குப் போட்டியில் உள்ளனர். மத்தியப்பிரதேசத்தைப் பொறுத்தவரை ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் கமல்நாத் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதேபோல் ராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் அஷோக் கெலாட் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.  மூன்று மாநிலங்களின் முதல்வரையும் ராகுல் காந்தியே தேர்வு செய்யலாம் என தற்போது ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப்! - ராகுலின் செம்ம ஐடியா

இதையடுத்து மூன்று மாநில முதல்வர்கள் யார் என்பதை தீர்மானிக்கும் ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. தேர்தலின்போது யார் அதிகம் உழைத்தது, அந்தந்த மாநிலத்தில் யாருக்கு அதிக செல்வாக்கு உள்ளது போன்ற பல கோணங்களில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தொண்டர்களின் கருத்துக்கும் முன்னுரிமை வழங்கியுள்ளார் ராகுல் காந்தி. இது தொடர்பாக ஒரு ஆடியோ மூலம் தன் தொண்டர்களிடம் பேசியுள்ளார் ராகுல். அதில்,  ‘மூன்று மாநிலங்களில் நம் வெற்றிக்கு உழைத்த அனைத்து தொண்டர்களுக்கும் என் பாராட்டுகள். தற்போது உங்களிடம் நான் ஒரு முக்கிய கேள்வியை முன் வைக்கவுள்ளேன். உங்கள் மாநிலத்தில் யார் முதல்வராக வரவேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள். யாராவது ஒரு பெயரை மட்டும் குறிப்பிடுங்கள். நீங்கள் கூறும் பதில் என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதனால் நீங்கள் தைரியமாக ஒருவரை தேர்ந்தெடுக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப்! - ராகுலின் செம்ம ஐடியா

தொண்டர்கள், முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக  ‘சக்தி’ என்ற ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தான் காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் மாநிலத்தின் முதல்வரைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர். மூன்று மாநிலங்களிலும் யார் முதல்வர் பதவிக்கு போட்டியிட உள்ளனர் என்பதை இன்று மாலைக்குள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார் ராகுல். ஒரு மாநிலத்தின் முதல்வரை தேர்ந்தெடுக்க தொண்டர்களின் கருத்தும் அவசியம் என்ற ராகுலின் செயலுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.