Published:Updated:

விட்டுக்கொடுத்தார் சிந்தியா.... - மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு!

விட்டுக்கொடுத்தார் சிந்தியா.... - மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு!
விட்டுக்கொடுத்தார் சிந்தியா.... - மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு!

மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விட்டுக்கொடுத்தார் சிந்தியா.... - மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு!

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தாலும் மற்ற மூன்று மாநிலங்களின் வெற்றியடைந்து சரித்திரம் படைத்துள்ளது. காங்கிரஸ் வெற்றியால் மூன்று மாநிலங்களில் அடுத்த முதல்வர்கள் யார் என்ற கேள்வி வாக்களித்த மக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளிடையே நிலவி வருகிறது. சத்தீஸ்கரில் பூபேஷ் பாகல், டி.எஸ்.சிங் தியோ மற்றும் தம்ராத்வாஜ் சாஹு ஆகியோர் முதல்வர் பதவிக்குப் போட்டியில் உள்ளனர். மத்தியப்பிரதேசத்தைப் பொறுத்தவரை ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் கமல்நாத் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. 

விட்டுக்கொடுத்தார் சிந்தியா.... - மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு!

அதேபோல் ராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் அஷோக் கெலாட் ஆகியோர் போட்டியில் உள்ளனர். மூன்று மாநிலங்களின் முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைக் கவனித்து வரும் ராகுல் காந்தி, இதில் மக்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டும் எனக் கூறி முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்காக  ‘சக்தி’ என்ற ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தினார். 

விட்டுக்கொடுத்தார் சிந்தியா.... - மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு!

இந்த நிலையில், மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போபாலில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் கமல்நாத் ஒருமனதாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதைக் காங்கிரஸ் கட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது.

விட்டுக்கொடுத்தார் சிந்தியா.... - மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு!

முன்னதாக ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் கமல்நாத் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், கமல்நாத்துக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்துள்ளார் சிந்தியா. அவர் துணை முதல்வராகப் பதவியேற்கலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. விரைவில் அவர் பதவியேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.