Published:Updated:

ராமர், வல்லபபாய் படேல், வரிசையில் என்.டி.ராமாராவ்! ஆந்திராவையும் விட்டுவைக்காத சிலை கலாசாரம்?

ராமர், வல்லபபாய் படேல், வரிசையில் என்.டி.ராமாராவ்! ஆந்திராவையும் விட்டுவைக்காத சிலை கலாசாரம்?
ராமர், வல்லபபாய் படேல், வரிசையில் என்.டி.ராமாராவ்! ஆந்திராவையும் விட்டுவைக்காத சிலை கலாசாரம்?

றைந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவுக்கு அமராவதியில் 108 அடி உயரச் சிலை அமைக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக ஆந்திர மாநில ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டுள்ளன...

சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் சர்தாய் வல்லபபாய் படேலுக்கு குஜராத் மத்திய அரசு 182 மிட்டர் உயர பிரமாண்ட சிலையை நிறுவியது. உலக அளவில் மிகவும் உயரமான சிலை இது என்ற பெயரையும் இந்தச் சிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து ராமருக்கு உலகிலேயே உயரமான 221 மீட்டர் உயர பிரமாண்ட சிலை லக்னோவில் நிறுவப்படும் என்று உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவைக் குழு கூடி யோகி ஆதித்யநாத் தலைமையில் அறிவித்தது. மகாராஷ்டிராவில் சிவாஜிக்கும் பிரமாண்ட சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை அமைக்கும் கலாசாரத்தில் தற்போது ஆந்திரப் பிரதேசமும் இணைந்திருக்கிறது. 

ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதியில் உள்ள நீருகொண்டா மலையில் 108 அடி உயரம் கொண்ட என்.டி.ராமா ராவ் சிலையை நிறுவ ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக ஆந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக ஆந்திர ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியாவது...

சிலை தொடர்பாக ஆறு மாதிரி வரைபடங்களைப் பரிசீலித்த அமராவதி அபிவிருத்திக் கழக அதிகாரிகள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் காட்டி அவற்றில் 108 அடி உயரம் கொண்ட சிலையின் மாதிரிக்கு ஒப்புதலைப் பெற்றிருக்கிறார்கள். இந்தச் சிலை 406 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. இவற்றில் 155 கோடி ரூபாயில் 200 ஏக்கர் பரப்பளவில் உணவு விடுதிகள், 500 இருக்கைகள் கொண்ட ஆடிட்டோரியம், ஷாப்பிங் பகுதி, அருங்காட்சியகம், தங்குமிடம் ஆகியவற்றை ஏற்படுத்தி சுற்றுலாத் தலமாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

photos credit: fb/IYR Krishna Rao

புதிதாக அமைக்கப்படும் இந்த என்.டி.ராமாராவ் சிலைக்கு 'தெலுங்கு மக்களின் சுய கவுரவ முன்மாதிரி' என்று பெயர் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிலை அமைக்கும் பணியானது அடுத்த 46 மாதங்களில் முடிவடையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை தொடர்பாக ஆந்திர அரசு இதுவரை எந்த அறிவிப்பும் செய்யாத நிலையில் ஊடகங்களில் மட்டும் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதேநேரம் முன்னாள் தெலுங்கு தலைமைச் செயலாளர் ஐயர் கிருஷ்ண ராவ் இதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.