வெளியிடப்பட்ட நேரம்: 06:27 (15/12/2018)

கடைசி தொடர்பு:07:38 (15/12/2018)

மேக்கே தாட்டூ பிரச்னை ஒன்றும் இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையல்ல! - கர்நாடக முதல்வர் குமாரசாமி

மேக்கே தாட்டூ விவகாரம் தொடர்பாக சென்னையில் பேட்டியளித்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, ``125 ஆண்டுக்கால காவிரி நதி நீர் பிரச்னை பேசித் தீர்க்கப்பட வேண்டியது" சென்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

குமாரசாமி

கர்நாடக மாநிலம், தும்கூர் ஸ்ரீ சித்தகங்கா மடத்தைச் சேர்ந்தவர் சாமியார் சிவக்குமார். 111 வயதான இவர் கடந்த சில தினங்களாக கல்லீரல் மற்றும் கணையத்தில் ஏற்பட்ட தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காகக் கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி இன்று சென்னை வந்தார். 

காவிரி

அப்போது அவர் செய்தியாளர்ககளைச் சந்தித்தார். அவரிடம் மேக்கே தாட்டூ அணை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ``தமிழக மக்களும், கர்நாடக மக்களும் சகோதரர்கள். காவிரி விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். மேக்கே தாட்டூ அணை விவகாரத்தைத் தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். மேக்கே தாட்டூ பிரச்னை ஒன்றும் இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையல்ல. இருமாநில முதல்வர்களும் பேசி தீர்த்துக்கொள்ளலாம். தமிழகத்தில் 50 சதவிகித தண்ணீர் கடலில் கலக்கிறது. 125 ஆண்டுக்கால காவிரி நதி நீர் பிரச்னையைப் பேசித் தீர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

விகடன்

கர்நாடக மாநிலம், ராம்நகர்  மாவட்டம், மேக்கே தாட்டூ என்னுமிடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, இரு மலைகளுக்கு இடையே அணை கட்ட பல ஆண்டுகளாகவே கர்நாடக ஆட்சியாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதைத் தமிழகம் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில், மேக்கே தாட்டூவில் அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைக் கடுமையாக எதிர்த்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கர்நாடக மற்றும் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு அறிக்கை அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 125 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காவிரி பிரச்னையைப் பேசித் தீர்த்துக்கொள்ள விரும்புகிறேன் என்று குமாரசாமி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க