Published:Updated:

`செந்தில் பாலாஜியால் கடுகளவுகூட பாதிப்பு இல்லை!' - சொல்கிறார் பொள்ளாச்சி ஜெயராமன்

`செந்தில் பாலாஜியால் கடுகளவுகூட பாதிப்பு இல்லை!' - சொல்கிறார் பொள்ளாச்சி ஜெயராமன்
`செந்தில் பாலாஜியால் கடுகளவுகூட பாதிப்பு இல்லை!' - சொல்கிறார் பொள்ளாச்சி ஜெயராமன்


"செந்தில் பாலாஜி தி.மு.க விற்கு சென்றதால் கடுகளவுகூட அ.தி.மு.கவிற்கு பாதிப்பு கிடையாது. அ.தி.மு.கவிலிருந்து  தி.மு.கவுக்கு  சென்றவர்கள் அரசியலில் சரியான இடத்தை அடைந்த வரலாறு இல்லை என சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்."

இன்று கோவையில் நடந்த "பிளாஸ்டிக்  மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு" பேரணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்  ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த  துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், "கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் தமிழக அரசு நிவாரணப் பணிகளை  சிறப்பாகச் செய்து வருகிறது.  பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் விரைவாக நிறைவடையும். கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. முதல்வர் நேரடியாக வலியுறுத்தியும் இதுவரை மத்திய அரசு  வழங்க வில்லை. தமிழக அரசு இதுவரை ரூ.1200 கோடி  அளவில் நிவாரண பணிகளை மேற்கொண்டிருக்கிறது
தமிழக அரசிடம் இருந்து அறிக்கை வரவில்லை என மத்திய அரசு  சொல்லும் காரணம் சரியில்லை. முதலில் உத்தேசமாக நிவாரணத் தொகையை  வழங்கிவிட்டுக்  கூட அறிக்கையைப் பெறலாம்' என்றார்.

மேலும் `அ.தி.மு.கவிலிருந்து தி.மு.க-விற்கு சென்றவர்கள் யாரும் அரசியலில் சரியான இடத்தை அடையவில்லை. அ.தி.மு.க எப்போதும் நிலைத்த தன்மையுடன் நீடித்து நிற்கும். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க விற்கு சென்றதால் அ.தி.மு.கவும்கு  கடுகளவு பாதிப்புகூட கிடையாது. ஈரோடு முத்துச்சாமி அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.கவிற்கு சென்றார். அதன் பின்னால் அவர் அரசியலில் வளர்ச்சி அடையவில்லை. அவர் அ.தி.மு.கவிலேயே இருந்திருந்தால் இந்நேரம் அவர் பெரிய வளர்ச்சி அடைந்திருப்பார். ஈரோடு முத்துச்சாமி சென்ற போதே ஏற்படாத பின்னடைவு இந்த செந்தில் பாலாஜி சென்றதாலா அ.தி.மு.கவுக்கு ஏற்படப் போகின்றது? செந்தில்பாலாஜி தி.மு.கவிற்கு சென்றதால் கொங்கு மண்டல அ.தி.மு.கவிற்கு  பின்னடைவு ஏற்படாது" என்று திட்டவட்டமாக கூறினார்.