Published:Updated:

ஸ்டெர்லைட் விவகாரத்தில் உடனடியாக மேல்முறையீடு! - அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் உறுதி

ஸ்டெர்லைட் விவகாரத்தில் உடனடியாக மேல்முறையீடு! - அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் உறுதி
ஸ்டெர்லைட் விவகாரத்தில் உடனடியாக மேல்முறையீடு! - அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் உறுதி

'ஸ்டெர்லைட் ஆலை விவாகரத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் கோவையில் தெரிவித்துள்ளார்.'

'பிளாஸ்டிக்  மாசில்லா தமிழ்நாடு' குறித்த மண்டல அளவிலான விழிப்புணர்வு கூட்டம் கோவை மாநகராட்சி கலையரங்கத்தில் இன்று  நடைபெற்றது. இந்நிகழ்ச்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கருப்பண்ணன், "வரும் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை சட்டம் அமலுக்கு வருகின்றது. 

கேரி பேக்குகள் மற்றும் தண்ணீர் பாக்கெட் போன்றவை தடை செய்யப்பட்டு அதற்கு மாற்று பொருட்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றவர், ``ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. முதல்வர் தெளிவாக இருக்கின்றார். இந்தப் பிரச்னையை சட்டரீதியாக எதிர்கொள்வோம்.

எந்த மாதிரியான சூழ்நிலை வந்தாலும் ஸ்டெர்லைட் விவகாரத்தைத் தமிழக அரசு சட்டரீதியாக எதிர்கொள்ளும். உடனடியாக மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 20 சதவீதம் மட்டுமே பயன்பாட்டில் உள்ள நெகிழிகள் தடை செய்யப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பயன்பாடு இனி  இருந்தால் அபராதம் விதிக்கப்படும்" என்றார்