பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்
ஆஹான்

Amudha Suresh
சேகுவாராவும் ஃபிடல் காஸ்ட்ரோவும் தமிழகத்திலேயே இருப்பதால், இனி பிரதமர் வெளிநாட்டுப் பயணங்களை ரத்து செய்துவிட்டு இந்தியாவில் நிலைகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். நாட்டில் இவர்களால் ஏற்பட்ட துயரங்களையும் இனி இவர்களே நீக்கிவிடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதால், இனி போராளிகளும் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்!

Bala Vin
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த தேவசம் போர்டுக்கு கேரள அரசு உத்தரவு....

# முல்லைப் பெரியாறு உத்தரவுக்கு மட்டும் அமைதியா இருப்போம்!

Suresh Kannan
வெகுஜன படைப்புகள் ஒருபுறமும், வணிகநோக்கமற்ற மாற்று முயற்சிகள் இன்னொருபுறமும் பயணிப்பது ஒரு சமூகத்திற்கு அவசியமானது. இந்த நோக்கில், நமக்கு மணிரத்னங்களும் தேவை. மாரி செல்வராஜ்களும் தேவை. கலைத்துறை சார்ந்த இயக்கத்தை, ஒட்டுமொத்த பார்வையில் மேலிருந்து பார்ப்பவர்களுக்கு இதன் அவசியம் தெரியும். முற்போக்கு உணர்வு ஆர்வக்கோளாறாக மாறாத சமநிலை அவசியம்.

Nandhini Anandan
சாராய மொத்த வியாபாரத்துக்காக எம்.ஜி.ஆர் ஆரம்பித்த டாஸ்மாக் நிறுவனத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரையும் மதுபானக் கடைகளுக்கு ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரது பெயர்களையும் சூட்டுவதே பொருத்தமானது.

Thiru Yo
தமிழ்நாடு அரசும் காவல்துறையும் திருமுருகன் காந்தி மீது நடத்துகிற தாக்குதல், அப்பட்டமான சித்திரவதை. உளவியல், உடல்ரீதியாக அவரை செயலிழக்க வைக்க நடத்துகிற கொலைத் தாக்குதல்.

Karl Max Ganapathy
எங்க ஊரு டாஸ்மாக்குல சரக்கடிச்சி செத்தவங்க நாலு பேரும் முப்பது வயசுக்காரனுங்க. அதாவது, டாஸ்மாக் வந்ததுக்கு அப்புறம் குடிக்கப் பழகுனவனங்க. பிரைவேட் கடை, சாராயக் கடை, கள்ளுக்கடை இருந்த காலத்துலேருந்து குடிச்சிட்டிருக்க கட்டைங்கல்லாம் கண்ணுல உசுர வச்சிக்கிட்டு இன்னும் திரியுதுங்க.

Shruthi R
ஒரு மெசேஜ் வந்துச்சு... நல்ல கவிதை எழுதற, உளவியல் எழுதற, பிறகேன் சாதியொழிப்பு பேசிட்டு இருக்க? பார்க்க உயர்சாதி இந்து மாதிரிதான் இருக்க. ஏன் இந்த வேலை உனக்குன்னு. அங்க நான் பதில் சொல்லலை.

உங்கள் சாதிப் பெருமை ஒரு மனிதனை, குழந்தையைக்கூட தற்கொலை செய்துகொள்ளவைக்கும். சாதி சுமந்து வாழ்பவர் கண்களுக்கு உயிர்கள் தெரியாது, குழந்தைகள் தெரியாது, வயது தெரியாது, மனம் தெரியாது, குணம் தெரியாது. எதையுமே பார்க்காமல் சக உயிரின் மீது வன்மங்களை உமிழ மட்டும்தான் தெரியும்.

ஆஹான்

Rajagopal Subramaniam
செப்டம்பர் 25, நேரம் காலை 10:30

தம்பி... இப்போ 2014-ல இருக்கீங்க... என்ன சொன்னீங்கன்னு ஞாபகப்படுத்திச் சொல்லுங்க?

மோடி பிரதமரானா பெட்ரோல் விலை குறையும்.
ஒரு டாலர் 40 ரூபாய்க்கு வரும்.
பாகிஸ்தான், சீனாலாம் நம்மைப் பார்த்துப் பயப்படும்.
கறுப்புப் பணமே இருக்காது.
சுவிஸ் பாங்க்ல இருந்து மீட்டு எல்லோருக்கும் 15 லட்சம் கிடைக்கும்.
போதும்... போதும்... நிறுத்துங்க. நீங்க ஏன் அந்நியனா மாறுனீங்கன்னு சொல்லத் தேவையில்லை.

Gokul Ranga
சில நேரங்களில் அரசு ஊழியர்களின் சிறப்பான செயல்கள் பாராட்டுக்கு உரியவை. என் உறவினர்கள் நேற்று ரயிலில் வந்தபோது ஒருவருக்குக் கடுமையான வயிற்று வலி. என்னை அழைத்து உதவி கோரினார். நான் அவருடைய பி.என்.ஆர் எண், ரயில் எண் ஆகியவற்றைக் கேட்டு ரயில்வே உதவி மையத்தைத் தொடர்புகொண்டேன். அவர்கள் என்னை ரயிலில் உள்ள ஒருவரின் மொபைலிலிருந்து அழைத்து புகார் பதிவு செய்யக் கூறினார்கள்.

அதன்படியே செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவர் தொடர்பு கொண்டு கேட்டறிந்ததோடு, அடுத்த ரயில் நிலையத்தில் மருத்துவ உதவி வழங்குவதாய்த் தெரிவித்தார். அடுத்த ரயில் நிலையத்தில் ஐந்துபேர் கொண்ட குழு அவரை சந்தித்து மருத்துவ உதவி வழங்கியுள்ளனர். ரயில்வே மருத்துவ அவசர உதவிக்கு 138 என்ற எண்ணை மொபைலில் இருந்து அழையுங்கள். பாதிக்கப்பட்டவர் மொபைலிலிருந்து அழைப்பதனால், அருகில் உள்ள சேவை மையத்திலிருந்து உதவிகள் வழங்கப்படும்.

ஆஹான்

@sultan_Twitz
சே குவாரா, ஃபிடல் காஸ்ட்ரோ போல தமிழக மக்களுக்காகப் போராடுபவர்கள் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்  - அமைச்சர் ஜெயக்குமார்

# அடுத்து வளர்மதியை அன்னை தெரசான்னு சொன்னாலும் சொல்லுவாங்க!

@naatupurathan
எடப்பாடி வடிவில் சேகுவாராவைப் பார்க்கிறேன்- அமைச்சர் ஜெயக்குமார்!

# அடப்பாவிகளா... காராசேவை எல்லாம் சேகுவாராங்கறாங்களே!

@shivaas_twitz
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதாங்க’ பாட்டு பாடினார் அமைச்சர் ஜெயக்குமார் - செய்தி

# பி.ஜே.பி கூட்டணியை பாட்டாவே பாடிட்டாரு!

@yugarajesh2
மதுரையில் எய்ம்ஸ் அமைவது உறுதி - தமிழிசையக்கா!

# அக்கா, எதைச் சொன்னாலுமே எங்களுக்கு ‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ வசனம் மாதிரியேதான் கேட்குது!

@smhrkalifa
நாற்பது வருடங்களுக்கு முன்பே கையில் இரட்டை இலையை பச்சைக் குத்தச் சொன்ன எம்.ஜி.ஆர்-தான் ‘ப்ளூவேல்’ கேமின் முதல் அட்மின்.

@gips_twitz
வாவ்... மோகன், முரளிக்கு அடுத்து மைக் பாடகர்ன்னதும் நம் நினைவிற்கு வருவது அமைச்சர் ஜெயக்குமார்தான்

@yugarajesh2
‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா’ன்னு பேரு வச்சதுக்கு பதிலா ‘தி.மு.க-வை வசை பாடும் விழா’ன்னு பேரு வச்சிருக்கலாம்.

# பேரு வச்சீங்களே... சோறு வச்சீங்களா மொமன்ட்!

@shivaas_twitz
மேலதிகாரியிடம் லீவு கேட்கும்போது வெளிப்படுகிறார், நமக்குள் இருக்கும் சீமான்!

@lrsselvam
கடந்த 12 வருடங்களில் விலை ஏறாத பொருட்கள் டாப் 4
1) ட்யூப்லைட் (ரூ40)
2) தீப்பெட்டி (50 பைசா)
3) பூமர் பபிள்கம் (1 ருபா)
4) இலந்தை வடை (50 பைசா)

@19SIVA25
பணம் கொடுத்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு ஆட்களை அழைத்துச்செல்கிறார்கள்: டி.டி.வி.தினகரன்

# அண்ணே, அது கண்ணாடி. மைக்கு இந்தப் பக்கம் இருக்கு!

@Vicky_stirring
தமிழகத்தில் ஒரு நிமிடம்கூட மின்வெட்டு இல்லை - அமைச்சர் தங்கமணி

# ஆமா, மின்வெட்டு இல்லை. பவர்கட்தான் இருக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு