Published:Updated:

‘தேர்தல் அறிவித்தவுடன்தான் கூட்டணி!’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

‘தேர்தல் அறிவித்தவுடன்தான் கூட்டணி!’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி
‘தேர்தல் அறிவித்தவுடன்தான் கூட்டணி!’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

'தேர்தல் அறிவித்த பிறகுதான் கூட்டணி வைக்கும் சூழ்நிலை அ.தி.மு.க-வுக்கு உருவாகும்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சிலை வைக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டுள்ளனர்  அவ்வளவுதான். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க முன்னிறுத்தியிருப்பது தி.மு.க-வினரின் விருப்பம். தேர்தல் அறிவித்தவுடன்தான் கூட்டணி வைக்கும் சூழ்நிலை உருவாகும். அப்போது, அ.தி.மு.க கூட்டணி  முடிவுசெய்யப்படும்'' என்றார். 

ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க முடியுமா? என்ற கேள்விக்கு, ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் சார்பில்  மேல்முறையீடு செய்யப்படும். தி.மு.க தரப்பில் இன்னும் கூட்டணியே அமையவில்லை.  அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து சந்திக்கின்றனர். கூட்டணி அமையவில்லை என்பதை தி.மு.க பொருளாளர் துரைமுருகன் ஏற்கெனவே விளக்கியிருக்கின்றார்.

கூட்டணி  அறிவிக்கப்பட்ட பின்னர்தான் மற்றவை  தெரியும். கொங்கு மண்டல மக்களின் கனவுத் திட்டமான அத்திகடவு அவிநாசி திட்டத்துக்கு 1,532 கோடிக்கு  ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டு பணிகள் துவங்கும் என்றார்.