Published:Updated:

`பொதுக்கூட்டத்துக்காக தி.மு.க திருட்டு மின்சாரம் எடுத்தது' - அமைச்சர் ஜெயக்குமார் புகார்

`பொதுக்கூட்டத்துக்காக தி.மு.க திருட்டு மின்சாரம் எடுத்தது' - அமைச்சர் ஜெயக்குமார் புகார்
`பொதுக்கூட்டத்துக்காக தி.மு.க திருட்டு மின்சாரம் எடுத்தது' - அமைச்சர் ஜெயக்குமார் புகார்

சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க திருட்டு மின்சாரம் எடுத்ததாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னை ராயபுரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``தமிழகத்தின் உரிமைக்காக இந்த அரசு போராடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு இணக்கமாக இருந்து தமிழகத்தின் உரிமைகளைப் பெற்று வருகிறோம். மத்திய அரசு மாநில விரோத நடவடிக்கைளில் ஈடுபடும்போதுகூட எங்கள் குரல் உயர்ந்திருக்கிறது. மேக்கே தாட்டூ விஷயத்தில் நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறோம். ஆனால், தி.மு.க நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு தலைவர்கள் வந்தார்கள். 

அவர்களிடம் தமிழகத்தின் உரிமைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேசவில்லை. மேக்கே தாட்டூ  அணை, ஆந்திராவில் தமிழர்கள் கொல்லப்பட்டது என எதைப் பற்றியும் இவர்கள் பேசவில்லை. உள்ளத்தில் ஒன்று; உதட்டில் ஒன்று பேசக்கூடியவர்கள் தி.மு.க-வினர். கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்காகத் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்துள்ளனர். விழாவுக்கான கட் அவுட்களுக்கு மாநகராட்சி மின் கம்பங்களில் இருந்து மின்சாரம் திருடியுள்ளார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார். 

முன்னதாக விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பட்டது குறித்து பேசிய அவர், ``சம்மன் அனுப்பிவிட்டால் மட்டும் குற்றவாளி ஆகிவிட முடியாது. இது சி.பி.ஐ-யின் வழக்கமான விசாரணைதான். தண்டனை பெற்றால் மட்டுமே குற்றவாளி ஆக முடியும். நீதிமன்றம் சொல்லும் வரை விஜயபாஸ்கர் குற்றவாளி கிடையாது" என்றார்.