Published:Updated:

போலி நிதி நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம்: சிட் பண்ட் சங்கம் வேண்டுகோள்

போலி நிதி நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம்: சிட் பண்ட் சங்கம் வேண்டுகோள்
போலி நிதி நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம்: சிட் பண்ட் சங்கம் வேண்டுகோள்

சென்னை: அதிக வட்டி தருவதாக கூறும் போலி நிதி நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சிட் பண்ட் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னையில் அனைத்திந்திய சிட் பண்ட் நிறுவனச் சங்க பொதுச் செயலாளர் டி.எஸ்.சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு சிட்பண்ட் நிறுவனங்கள் சங்கத் தலைவர் ஒய்.எஸ்.மதிவாணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "முறைப்படி பதிவு செய்யப்பட்ட சிட்பண்ட் நிறுவனங்களால், மக்களிடமிருந்து வைப்புத் தொகைகளைப் பெறவோ, கடன் கொடுக்கவோ, வேறு ஏதேனும் நிதி சார்ந்த சேவைகளை வழங்கவோ முடியாது. சிட் பண்ட் நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட, முறையான வங்கி சாரா நிதிச் சேவை நிறுவனங்களில் ஒரு வகையாகும்.

சிட் பண்ட் நிறுவனங்கள் ‘ சிட் பண்ட்‘ நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மொத்த ஆண்டு விற்று வரவு சுமார் ரூ.4 ஆயிரம் கோடியாகும். வைப்பு நிதித் திட்டங்களை சிட் பண்ட் நிதிகளுடன் தவறாக ஒப்பிடுவதால் ஏற்படும் கருத்துப் பிழையால் சிட் பண்ட் நிறுவனங்களின் மீது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை குறைந்து வருகிறது. கேரளாவில் அரசே நடத்துவதால் சிட் பண்ட் தொழில் ஆண்டுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை வளர்ச்சியடைந்து வருகின்றன.

தமிழகத்தில் அரசுப் பதிவாளர் அலுவலகம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எனவே, சிட் பண்ட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும். சிட்பண்ட் நிறுவனம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. பொது வைப்பு நிதிகளையும் நாங்கள் நிர்வகிக்காத போது, பல்வேறு நிதி நிறுவன முறைகேடுகளைத் தவறுதலாக சிட் பண்ட் முறைகேடுகள் என்று கருதுவது கவலை அளிக்கிறது. சிட் பண்ட் குறித்து அந்தச் சந்தேகங்கள் இருந்தாலும், தமிழ்நாடு சிட் பண்ட் நிறுவனங்கள் சங்க அலுவலகத்தை அணுகலாம்.

##~~##
அண்மைக்கால நடப்புகள் அச்சுறுத்துவதாகவும், துன்பம் தருவனவாகவும் உள்ள நிலையில் சிட் பண்ட் நிறுவனங்கள் மீது இப்பழியை சுமத்துவதால் இச்சிக்கல் இன்னும் தீவிரமடையும். தேசிய பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும்.
பல ஆண்டுகளாக முறைப்படி நடத்தப்பட்டு வரும் சிட் பண்ட் நிறுவனங்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே அதிக வட்டி தருவதாக கூறி பணம் திரட்டும் நிதி நிறுவனங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.