Published:Updated:

`ஹெச்.ராஜா குட்டிக்கரணம் போட்டாலும் அது நடக்காது! - திருமாவளவன் காட்டம்

`ஹெச்.ராஜா குட்டிக்கரணம் போட்டாலும் அது நடக்காது! - திருமாவளவன் காட்டம்
`ஹெச்.ராஜா குட்டிக்கரணம் போட்டாலும் அது நடக்காது! - திருமாவளவன் காட்டம்

``குட்டிக்கரணம் போட்டாலும் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற ஒருங்கிணைவை ஹெச்.ராஜாவால் சிதறடிக்க முடியாது'' என்று கோவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

`ஹெச்.ராஜா குட்டிக்கரணம் போட்டாலும் அது நடக்காது! - திருமாவளவன் காட்டம்

கோவை விமான நிலையத்தில் தொல்.திருமாவளவன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் அப்போது, `` 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க முன்மொழிந்ததை வி.சி.க வழிமொழிகிறது. அகில இந்திய அளவில் 5 மாநிலத் தேர்தலில் 3 மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க யுக்திகளை வகுத்து வெற்றிப் பெற்றுள்ளதால், அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற ஜனநாயக  சக்தியை ஒருங்கிணைக்கும் தகுதியைப் பெற்ற தலைவராக ராகுல் காந்தி உயர்ந்துள்ளார்.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமலும் சகித்துக்கொள்ள முடியாமலும்தான் ஹெச்.ராஜா வாய்க்கு வந்தபடி விமர்சித்து வருகிறார். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பாதுகாப்பு காரணங்களால் குறிப்பிட்ட சிலர் மட்டுமே மேடையில் உட்கார அனுமதியளிக்கப்பட்டது. காழ்ப்புணர்ச்சியோடு எப்படியாவது தி.மு.க. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஹெச்.ராஜா  வதந்தியை பரப்புகிறார். ஹெச்.ராஜா போன்றவர்கள் எந்த முயற்சி செய்தாலும், குட்டிக்கரணம் போட்டாலும் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற ஒருங்கிணைவை சிதறடிக்க முடியாது.

`ஹெச்.ராஜா குட்டிக்கரணம் போட்டாலும் அது நடக்காது! - திருமாவளவன் காட்டம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையிலும், ஆளுநர் ஏன் தயங்குகிறார் என்பது குறித்து பி.ஜே.பி பதில் அளிக்க வேண்டும். கஜா புயலுக்காக பி.ஜே.பி என்ன செய்தது, முதல்வரிடம் என்ன கொடுத்தது என்பது குறித்தும் தெரிவிக்க வேண்டும். மேலும், புயல் பாதிப்பு குறித்த இறுதி அறிக்கையைத் தர வேண்டியது மத்திய அரசு குழுதான்.

பிரியங்கா சோப்ரா திருமணத்துக்குச் செல்லக்கூடியவர் நடிகர், நடிகைகளுக்கு, தொழிலதிபர்களுக்கு நேரம் கொடுத்து பேச கூடியவர் அதானி, அம்பானியுடன் சுற்றக்கூடிய பிரதமர் கஜா புயலால் பாதித்த மக்களை பார்க்க வராமல் தமிழக மக்களின் வேதனையைப் பார்த்து ரசிக்கக்கூடிய மனப்பான்மையோடு இருப்பதால்தான் சேடிஸ்ட் பிரதமர் என்று மோடியை ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

`ஹெச்.ராஜா குட்டிக்கரணம் போட்டாலும் அது நடக்காது! - திருமாவளவன் காட்டம்

மைத்ரிபால சிறிசேன தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் தடுமாற்றத்தோடு செயல்பட்டு வருகிறார். ராஜபக்சே தரப்பு ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள சமரச நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார். மேலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் ஒன்றாக உறுதியாக நின்று ராஜபக்சேவை பிரதமர் நாற்காலியில் அமர தடுத்தார்கள் என்பது முக்கியமான வரலாறு எனவும் சுட்டிக்காட்டினார். 

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வேதனைக்குரியது. இதற்கு தமிழக அரசுதான் காரணம். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அறிக்கையை வைத்துக்கொண்டு போதிய ஆதாரங்களை திரட்டாத தமிழக அரசின் மெத்தனப் போக்கால்தான் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே மேகதாது, ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும்" என்றார்.