Published:Updated:

தென்னிந்தியாவின் முதல் இரும்புப் பாலம்! - குமரியில் பயன்பாட்டுக்கு வந்தது

தென்னிந்தியாவின் முதல் இரும்புப் பாலம்! - குமரியில் பயன்பாட்டுக்கு வந்தது
தென்னிந்தியாவின் முதல் இரும்புப் பாலம்! - குமரியில் பயன்பாட்டுக்கு வந்தது

ன்னியாகுமரி மாவட்டத்தில் இரும்புத் தூண்களால் அமைக்கப்பட்ட இரண்டு மேம்பாலங்கள் வாகன போக்குவரத்துக்காக இன்று திறந்துவிடப்பட்டது.

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்விதமாகப் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் 2016-ம் ஆண்டு மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கின. சுமார் 307 கோடி ரூபாய் செலவிலான இரண்டு மேம்பாலங்களுக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார். இந்த இரண்டு மேம் பாலங்களுக்கான பில்லர்கள் மற்றும் பீம்கள் இரும்பால் அமைக்கப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் முதல் இரும்புப் பாலங்கள் இவைதான். இந்தப் பாலப் பணிகளை முன்னிட்டு வேறு பாதை வழியாகப் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டது. மார்த்தாண்டம் மேம்பாலம் கடந்த மாதம் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்துவிடப்பட்டது. பார்வதிபுரம் மேம்பாலம் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்துவிடப்பட்டது.

பார்வதிபுரம் மேம்பாலம் கடந்த 15-ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்கள் வாகன போக்குவரத்துக்காக இன்று அதிகாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டது. பாலத்தின் கீழ் பகுதியில் சாலை பணிகள் நடப்பதால் மேம்பாலம் மீது மட்டும் வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில் இரண்டு பாலங்களுக்கான திறப்புவிழாவை விமரிசையாக நடத்த கன்னியாகுமரி மாவட்டப் பா.ஜ.க-வினர் தயாராகி வருகின்றனர். இரண்டு மேம்பாலங்கள் காரணமாகக் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளன.