Published:Updated:

`பொன். மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்’ - சி.வி.சண்முகம்

`பொன். மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்’ - சி.வி.சண்முகம்
`பொன். மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்’ - சி.வி.சண்முகம்

காஞ்சிபுரத்தில் அரசு விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் சி.வி. சண்முகம், `பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்' எனத் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் கூடுதல் சார்பு நீதிமன்றத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``ஒரு உயர் அதிகாரி தனக்குக் கீழ் பணிபுரிபவர்களை கொடுமைப்படுத்துவதாகவும், இப்படித்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என வற்புறுத்துவதாகவும் புகார் எழுந்திருக்கிறது. இது மிகப்பெரிய குற்றச்சாட்டு. அந்த அதிகாரி பொன்.மாணிக்கவேல் என்பதற்காக விசாரணை செய்யாமல் இருக்க முடியாது. தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களை மனிதர்களாக மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பொன்.மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிக்கப்பட்டது தவறு என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணையின்போது அவர் என்னென்ன தவறுகள் செய்திருக்கிறார் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்போம்.

ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை பெற்றுவரும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விரும்பம். அதற்காகத்தான் சட்ட மன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றினார். அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் முதல்வர் சட்டமன்ற அமைச்சரவையைக் கூட்டி 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்குப் பரிந்துரை செய்திருக்கிறார். தமிழக அரசு தனது கடமையை முழுமையாக நிறைவேற்றிவிட்டது. இதில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். ” என்றார்.