Published:Updated:

``பா.ஜ.க-வினர் வாயைக் கட்ட துணி தேவைப்படுகிறது” - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கிண்டல்

``பா.ஜ.க-வினர் வாயைக் கட்ட துணி தேவைப்படுகிறது” - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கிண்டல்
``பா.ஜ.க-வினர் வாயைக் கட்ட துணி தேவைப்படுகிறது” - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கிண்டல்

``பா.ஜ.க-வில் இருக்கும் சிலர் குறைவாகப் பேசினால் நல்லது'' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், `` பா.ஜ.க-வில் நிறைய தலைவர்கள் உள்ளனர். அவர்கள் அதிகமாக ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கின்றனர். பா.ஜ.க-வினர் குறைவாகப் பேசினால் மிகவும் நல்லது. 1972-ம் ஆண்டு வெளியான ‘பாம்பே டு கோவா’ படத்தில் ஒரு குழந்தை உணவு கேட்டு அலறும். குழந்தையைக் கட்டுப்படுத்த ஒருவர் அதன் வாயில் துணியை கட்டுவார். அதேபோன்ற ஒரு துணி தற்போது பா.ஜ.கவுக்குத் தேவைப்படுகிறது” எனக் கிண்டலாகப் பேசினார். 

இதையடுத்து உத்தரப்பிரதேச முதல்வர் கடவுள் ஹனுமனின் சமூகம் குறித்தும், உ.பி பா.ஜ.க தலைவர் மகேந்திரநாத் பாண்டே, ராகுல் காந்தி இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் விமர்சித்துள்ளார்களே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``அவர்கள் நகைச்சுவை செய்கிறார்கள்” எனப் பதிலளித்துள்ளார். 

மேலும் பேசிய அவர், ``அரசியல்வாதிகள் ஊடகங்கள் முன் குறைவாகப் பேச வேண்டும் என்பதுதான் என் கருத்து. அதுதான் தற்போது தேவைப்படுகிறது. அதிலும் பா.ஜ.க-வுக்கு சற்று அதிகமாகவே தேவைப்படுகிறது. ரஃபேல் விமான விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என ராகுல் வலியுறுத்துகிறார். உச்சநீதிமன்றத்தைவிட நாடாளுமன்ற கூட்டுக் குழு பெரியதா” எனக் கேள்வியெழுப்பினார்.