Published:Updated:

தமிழ்நாடு

தமிழ்நாடு
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாடு

Published:Updated:
தமிழ்நாடு
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாடு

சோலார் ஆட்டோ!

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், சூரிய சக்தி மூலம் இயங்கும் சோலார் ஆட்டோவை வடிவமைத்துள்ளார், தேனியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சுகுமார். இந்த சோலார் ஆட்டோ, மணிக்கு 30 கி.மீ வேகத்தில் இயங்கும்.  ஒரு முறை சார்ஜ் ஏற்றிக்கொண்டால்  60 முதல் 80 கிலோமீட்டர் வரை எளிதாகச் செல்ல முடியும். டீ குடிக்கும் நேரத்தில் சார்ஜ் ஏறிவிடுமாம். கடந்த ஜூலை மாதம், திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலைக்கழகத்தில் இந்த சோலார் ஆட்டோவை சுகுமார் செயல்படுத்திக் காட்டியபோது, தமிழக ஆளுநர், இவரின் கண்டுபிடிப்புக்கு விருது கொடுத்துப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்புமில்லாத இந்த சோலார் ஆட்டோவுக்கு அப்பகுதியிலுள்ள மக்களும் நல்ல வரவேற்பு கொடுத்துவருகின்றனர்.

தமிழ்நாடு

பள்ளியில் படிக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ்!

கரூர் மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய கிராமம் தொட்டியாபட்டி. அந்தக் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், ஒவ்வொரு வகுப்பிலும் முதல் இரண்டு இடங்கள் வரும் மாணவர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் பட்டங்கள் வழங்கி, அதற்கான அடையாள அட்டையையும் தருகிறார் பள்ளியின் தலைமையாசிரியர். அந்த மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, அடையாள அட்டைகளை அணிந்துகொண்டுதான் வரவேண்டும். இதுமட்டுமல்லாமல், இரண்டாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன், கனிகளின் பெயர்களையும், மூன்றாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன், காய்கறிகளின் பெயர்களையும் சேர்த்துச் சூட்டியுள்ளனர். அதேபோல நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன், மரங்களின் பெயர்களையும் அறிவியல் அறிஞர்களின் பெயர்களையும் சூட்டி, அந்த மாணவர்களை உற்சாகப்படுத்துகின்றனர் அப்பள்ளியின் ஆசிரியர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ்நாடு

குளு குளு ஐஸ்கிரீம் கண்காட்சி!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், அக்டோபர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஐஸ்கிரீம் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தார். ஐஸ்கிரீம் தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருள்கள், குளிர்சாதனப் பெட்டிகள் ஆகியவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. பார்வையாளர்கள் அனைவரும் குழந்தைகளுடன் கலந்துகொண்டு ஐஸ்கிரீம் தயாரிப்பை பார்வையிட்டதோடு, ஐஸ்கிரீம்களை சுவைத்துப் பார்த்துக் கொண்டாடினர்.

தமிழ்நாடு

கோலாகல கபடி லீக்!

‘ப்ரோ கபடி லீக்’ போட்டி, அக்டோபர் 7 ஆம் தேதி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி பாட்னா அணிக்கு எதிராகக் களம்கண்டு அபார வெற்றிபெற்றது. அதற்கடுத்து நடைபெற்ற 3 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. தமிழ் தலைவாஸ் அணியில் அனுபவமான முன்னணி வீரர்கள், இளம் புயல்கள் எனச் சிறந்த கலவையோடு வீரர்கள் இடம்பெற்றிருப்பதால், தவறுகளை விரைந்து சரி செய்துகொண்டு அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள், ப்ரோ கபடி லீக் தமிழ் தலைவாஸ் ரசிகர்கள்.

தமிழ்நாடு

நூலகத்துக்கு இடமளித்த மூதாட்டி!

தஞ்சாவூர் அருகே, 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசுப் பொது நூலகம், 30,000 புத்தகங்களோடு வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த நிலையில், அங்கு நூலகராகப் பணிபுரிபவர், நூலகத்துக்கென சொந்தமாக இடம் வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார்.  இதையறிந்த மாயா என்ற 76 வயது மூதாட்டி, ‘வாசிப்புதான் மக்களின் அறிவை வளர்க்கும்’ என்று கூறி, தன் ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள 4,303 சதுர அடி நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு

- நா.வருண்

தெரியுமா?

‘தமிழ்நாட்டின் அன்னிபெசன்ட்’ எனக் குறிப்பிடப்பட்டவர், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism