Published:Updated:

‘பெரியாரை கொச்சைப்படுத்திப் பேசினால் அவ்வளவுதான்’- எச்சரிக்கும் திருமுருகன் காந்தி

‘பெரியாரை கொச்சைப்படுத்திப் பேசினால் அவ்வளவுதான்’- எச்சரிக்கும் திருமுருகன் காந்தி
‘பெரியாரை கொச்சைப்படுத்திப் பேசினால் அவ்வளவுதான்’- எச்சரிக்கும் திருமுருகன் காந்தி

தந்தை பெரியாரின் வழியில் தேர்லில் பங்கெடுக்காமல் ஒன்று திரண்டு நிற்கிறோம். பெரியாரைக் கொச்சைப்படுத்தி பேசினாலும், வன்முறையை தூண்டும் வகையில் பேசினாலும் அவர்கள் சட்டரீதியான  வழக்குகளை சந்திக்க வேண்டும் என திருமுருகன் காந்தி எச்சரித்துள்ளார்.

தந்தை பெரியாரின் வழியில் தேர்தலில் பங்கெடுக்காமல் ஒன்று திரண்டு நிற்கிறோம் .பெரியாரைக் கொச்சைப்படுத்தி பேசினாலும், வன்முறையை தூண்டுவகையில் பேசினால் அவர்கள் சட்டரீதியான வழக்குகளைச் சந்திக்கவேண்டி வரும். என எச்சரிக்கிறார் திருமுருகன் காந்தி.வரும் 23ம் தேதி தந்தை பெரியார் நினைவுநாளை முன்னிட்டு திருச்சியில் தந்தை பெரியார் கருஞ்சட்டைப் தமிழின உரிமை பேரணி மீட்டு மாநாடு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்குத் திருச்சி காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவோடு மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் திருச்சியில் விடுதலை தமிழ்புலிகள் கட்சி குடந்தை அரசன், மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சியில்  செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது குடந்தை அரசன்,“இம்மாநாட்டிற்க்கு திருச்சி மாநகர காவல்துறையும், மாநகராட்சியும் அனுமதி அளிக்காத நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெற உள்ளது. இம்மாநாடு நிச்சயம் மாபெரும் திருப்புமுனை மாநாடாகும்.  பாசிசத்தைத் தூக்கி நிறுத்துவதற்காக தொடர்ந்து தமிழ்நாட்டில் முயற்சி செய்து வருகிறார்கள். இந்த முயற்சி ஒருபோதும் பயனிளிக்காது.

இம்மாநாட்டிற்க்கு திராவிட கழக தலைவர் கீ.விரமணி, மார்க்கியப் பெரியாரியப் பொதுவுடைமை கட்சி ஆனைமுத்து, திராவிடர் விடுதலைகழகம் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் இராமக்கிருட்டிணன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை சுப.வீரபாண்யன், மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட பெரியாரின் கருத்துகளை ஏற்றுக்கொண்ட இயக்கங்களைச் சேர்ந்த இலட்சத்திற்கு மேற்பட்ட கருஞ்சட்டையுடன் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.

சாதாரண சின்ன நிகழ்வுகூட நீதிமன்ற சென்று உத்தரவைப் பெறக்கூடிய நிலையில்தான் தமிழகம்  உள்ளது. இவற்றுக்கெல்லாம் சேர்த்த பதில் சொல்ல கூடிய நிலையில் இந்த மாநாடு இருக்கும். பெரியாரின் கைத்தடி இருக்கும் வரை இந்து பாசிசத்தை நிலைநாட்டிவிட முடியாது. திருமுருகன் காந்தி மேல் குற்றம் மட்டும்தான் சாட்டப்பட்டுள்ளது. அவர் தண்டனை குற்றவாளி அல்ல. அவர் கலந்து கொள்வதால் என்ற ஒற்றைக் காரணத்திற்காக மாநாட்டை மறுக்கிறார்கள். இந்த நாட்டில் சமூக நீதி உருவாக்கி பெரியாரின் கொள்கைக்கான  மாநாட்டிற்கு அனுமதி இல்லை என்றால் யாருடைய ஆட்சி நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் என்றார்.

தொடர்ந்து பேசிய திருமுருகன் காந்தி,“தேர்தலில் பங்கு எடுக்காத இயக்கங்கள் ஒருங்கிணைந்து முதல் கட்டமாக நடத்துகிறோம். தமிழ்நாடு முழுவதும் ஒடுக்குமுறைக்கு ஆளான இயக்கங்கள்தான் நடத்துகிறது. இயக்கங்களுக்குத்தான்  இப்போதுநெருக்கடி அதிகமாக உள்ளது. இயக்கத் தோழர்களுக்குத்தான் அதிகமாக வழக்குகள் உள்ளது. இயக்கங்களுக்கு மட்டும்தான் நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை. மேலும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிரதான கோரிக்கைகள் அனைத்தும் இயக்கங்கள் முன் நின்று களப்பணி ஆற்றி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் அரசியல் வழியை முடிவு செய்வது தேர்தலில் பங்கெடுக்காத இயக்கங்கள் தான் என்றும், அதை நிறுவதற்காக தான் இந்த மாநாடு. தந்தை பெரியாரின் வழியை ஏற்றுக்கொண்டு அவர்வழியிலே தேர்தலில் பங்கெடுங்காமல் ஒன்று திரண்டு நிற்கிறோம். தேர்தல் கட்சியை புறக்கணிப்பது எங்கள் நோக்கமல்ல. கலவரம் செய்யக்கூடிய குழுக்களுக்குத் தமிழக அரசு அனுமதி அளிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம்ஒழுங்கு இல்லாமல் இருக்கிறது. கலவரம் பண்ணக்கூடிய குழுக்களுக்கு எதிராக அமைதியை விரும்பக்கூடிய இயக்கங்களுக்கு அனுமதி அளிக்க மறுக்கிறது.

இந்த அரசு திட்டமிட்டு வன்முறையாளர்களுக்கு அனுமதி கொடுத்து சட்டஒழுங்கை சீர்குலைக்க விரும்புகிறது என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. காவல்துறை யார் பேசவேண்டும், யார் பேசக்கூடாது என்ற முடிவை எடுக்கிறது. தந்தை பெரியாரை பற்றி தமிழ்நாட்டில் கீழ்த்தரமான பேசக் கூடிய நபர்கள் மீது சரியான எதிர்ப்பை வரும் காலத்தில் சந்திக்கக் கூடும் என்றும், இனிமேல் அனைத்து இயக்கங்களும் சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம்.

ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்பு, இந்து மக்கள் கட்சி போன்ற வன்முறை கூட்டத்தை சார்ந்தவர்கள் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஜனநாயக முறையில் எதிர்ப்பைச் சந்திப்பார்கள் என்றும், நாங்கள் தனித்த நபர்கள் இல்லை முற்றிலும் பெரியார் மண், பெரியாரைக் கொச்சைப்படுத்தி பேசினாலும், வன்முறையை தூண்டுவகையில் பேசினாலும் அவர்கள் மீது சட்டரீதியான வழக்குகளைச் சந்திக்கவேண்டி வரும். அமைதியான முறையில் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டி வரும், தமிழ்நாட்டில் கலவரங்கள், சாதிய படுகொலை நடக்கக் கூடாது அதற்காகத் தான் இம்மாநாடு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டஒழுங்கு சீர்குலைவதற்கு யார்காரணம் என்பதற்க்hக தான் இம்மாநாடு நடத்தப்படுகிறது. இதில் இந்த அரசும் அம்பலமாகி இருக்கிறது என்றார் காட்டமாக.