Published:Updated:

ஆஹான்

ஆஹான்
பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்

ஆஹான்

ஆஹான்

ஆஹான்

Published:Updated:
ஆஹான்
பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்
ஆஹான்

Boopathy Murugesh
சமீபத்தில் பார்த்து ரொம்ப பாதிச்ச புகைப்படம். இன்னும் கொஞ்ச நாளில் இந்தப் பொண்ணையும், பல லட்சம் செலவு பண்ணி கோச்சிங் கிளாஸ் போன பணக்காரப் பொண்ணையும் ஒண்ணா நீட் எக்ஸாம் எழுதச் சொல்வாங்க. ஒருவேளை இந்தப் பொண்ணுக்கு இடஒதுக்கீடு இருந்தாலும், அதை வாங்கறதுக்கு தன் ஜாதில இருக்க டாக்டர், அரசியல்வாதிகள் மகள்களோட போட்டி போடணும்.

அதையெல்லாம் யோசிக்க இப்ப நேரமில்ல. தெரு விளக்கு வெளிச்சம் இருப்பதற்குள்ள அசைன்மென்ட்டை முடி தங்கச்சி. நாளை விடியும்!

ஆஹான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Vasu Murugavel
இலங்கையில் இன்றும் இனப்படுகொலை தொடர்வதாக உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் ராமு மணிவண்ணன் குழுவினர் தெரிவித்துள்ளார்கள். தமிழக மக்கள் குறைந்தபட்சம் இந்த உரையாடலைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். ‘வே.பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்’, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்’, ‘ஒற்றை ஆட்சி முட்டை ஆட்சி’ போன்ற உரையாடல்களைவிட மிக முக்கியமான விஷயம் இதுதான்.

ஆஹான்

Brinda
இந்தியப் பெண்கள்: ராத்திரி தனியா நடக்கணும்!
சமூகம்: கூடாது, யாராவதுக் கையைப் பிடிச்சி இழுத்துடுவாங்க.
இந்தியப் பெண்கள்: தனியா வெளியூர் போகணும்!
சமூகம்: கூடாது, யாராவதுக் கையைப் பிடிச்சி இழுத்துடுவாங்க.
இந்தியப் பெண்கள்: தனியா வீடு எடுத்துத் தங்கணும்!
சமூகம்: கூடாது, யாராவதுக் கையைப் பிடிச்சி இழுத்துடுவாங்க.
இந்தியப் பெண்கள்: என்னை இவர் கையைப் பிடிச்சி இழுத்துட்டார்!
சமூகம்: உண்மையாவா? அப்படி நடக்க வாய்ப்பில்லையே!

Shalini
கணவருக்குத் தெரியாமல் ரகசியமாகப் பணம் சேர்க்கும் பெண்கள், வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன் அனுப்பும் பணத்தை வைப்புக் கணக்கில் வைத்திருக்கும் பெண்கள், எழுதப் படிக்கத் தெரியாத வாடிக்கையாளர்கள், நம்ம பாங்க்காரர்தானே என்கிற நம்பிக்கை வைக்கும் முதியவர்கள்... இப்படிப் பல பேரின் சேமிப்பை சில கிரிமினல் வங்கி ஊழியர்கள் ஒரே கையெழுத்தில் ஏமாற்றி எடுத்துக்கொள்கிறார்கள். அதனால் அவசரமாய் நீட்டப்படும் எந்த காகிதத்திலும் கையெழுத்திடாமல், நிதானமாய் படித்துத் தெரிந்துகொண்டு, தெளிவாய் புரிந்த பிறகே எதிலும் கையெழுத்திடவும்!

ரஹீம் கஸாலி

இன்னும் 50 வருஷங்களுக்கு பார்லிமென்ட்டில் பா.ஜ.க கொடி - அடித்துச் சொல்லும் அமித் ஷா

# அம்பது வருடமென்ன... காலாகாலத்துக்கும் பார்லிமென்ட்டில் பா.ஜ.க கொடி பறப்பதற்கு ஒரு ஐடியா வச்சிருக்கேன். அது வேற ஒன்றுமில்ல. ‘பா.ஜ.க கொடிதான் இனி தேசியக் கொடி’ன்னு சொல்லி மாத்திடுங்க. அப்புறம் யாரும் ஆயிரம் வருடம் ஆனாலும் பார்லிமென்ட்டிலிருந்து கழட்டவே மாட்டாங்க!

Mugil Siva
தமிழக சட்டசபையில் பத்து பேர் காவி உடையுடன் அமரும் காலம் விரைவில் வரும் - அமித் ஷா.

# எவ்வளவோ செய்கிறார்கள். எடப்பாடி அண்டு கோ-வினர் உங்களுக்காக இதைக்கூட செய்ய மாட்டார்களா என்ன? பத்து காவிச்சட்டை பார்சேல்ல்ல்!

Raghu Raman M
ஈழத்தின்மீதும், இலங்கைத் தமிழர்கள்மீதுமான அன்பும் நட்பும் இங்கிருக்கும் தமிழர்களிடையே குறைந்துவிட்டது என்பதை உணர முடிகிறது. இதில், மினிஸ்ட்ரி ஆஃப் எக்ஸ்டர்னல் அஃபையர்ஸ் மற்றும் இங்குள்ள தமிழ்த் தேசிய இயக்கங்களின் பங்கு அதிகம்.

P Kathir Velu
விவாகரத்து குறித்து உரக்கப் பேச வேண்டிய நிலைக்கு ஆளாகிவருகிறோம் என நினைக்கிறேன். கணவனோ, மனைவியோ பிடிக்கவில்லை எனும் காரணத்தினால் கொலை / தற்கொலை செய்து எல்லாவற்றிலும் மண் அள்ளிப் போடுவதற்கு முன், விவாகரத்து எனும் தீர்வு இருக்கிறது என்பதைப் புரிய வைக்க உரக்கப் பேசியே ஆக வேண்டும். விவாகரத்து பெருகிவிடும் எனப் பொங்க நினைப்போர்... ப்ளீஸ் டேக் டைவர்ஷன். பெருகும் கொலை / தற்கொலைகளைத் தடுக்க இது தேவையென தோன்றுகிறது.

ஆஹான்

@Arunan22
பெட்ரோல் விலை 86 ரூபாயையும், டீசல் விலை 80 ரூபாயையும் தாண்டிவிட்டது. முன்பெல்லாம் இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் ரூ.10-க்கு மேல் இருக்கும். இப்போது வெறும் ரூ.6தான்! இதன் அர்த்தம், பெட்ரோலைவிட டீசல் விலை அதிகரிப்பு. இதை மறைக்கவே சபரிமலையைத் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் பா.ஜ.க-வினர்.

@rahimgazali
என்னை நம்பியவர்களைக் கைவிடமாட்டேன் - எடப்பாடி

# ஓ.பி.எஸ் குரூப்புக்கு மெசேஜ் சொல்றாருபோல...

@kathir_twits

இன்னும் 50 வருஷங்களுக்கு பார்லிமென்ட்டில் பா.ஜ.க கொடிதான் பறக்கும் - அமித் ஷா

# இப்போ ஒரு போட்டோ எடுத்து உங்க வீட்ல மாட்டிட்டா, மூணு தலைமுறைக்குப் பாக்கலாம் - செல்லூர்

@gips_twitz

ஊழல்வாதிகளுக்கு பி.ஜே.பி-யில் இடமில்லை - மோடி

# அப்போ ஹவுஸ்புல் போர்டு மாட்டி வைங்க!

ஆஹான்

@Vignesh_twitz
அ.தி.மு.க தலைமைக் கழகம் எதிரில் வைக்கப்பட்டுள்ள பேனரில், தமிழக நிரந்தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த பேனரை வைத்தவர் தேனி மாவட்ட மாணவரணி செயலாளர்.

# மாபெரும் குறியீடு!

@sultan_Twitz

கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை - தொல்பொருள் ஆய்வுத் துறை

# ஏன், ராணுவ ஹெலிகாப்டரை வாடகைக்கு விட்ட மாதிரி இதையும் வாடகைக்கு விட்டுட்டீங்களா?

@kumarfaculty
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, புதிய வாக்கபிள் டிஸ்டன்ஸ்களை உருவாக்கிவிட்டது!

@Akku_Twitz

ஜெ. உயிருடன் இருந்திருந்தால் வைரமுத்து ஜெயிலில் இருந்திருப்பார்!

# ஜெ. உயிருடன் இருந்திருந்தால் அவங்களே ஜெயில்லதான் இருந்திருக்கணும்... போவியா!

@19SIVA25
மதுரையில் எடப்பாடி பேசுகிறார் என்று போஸ்டர் அடித்து விளம்பரம் செய்து ஒரு 300 பேரை அவர்கள் கூட்டிக் காட்டட்டும், என் தலையை வெட்டித் தரையில் போட்டு விடுகிறேன் - நாஞ்சில் சம்பத்

# சே குவேராவுக்கா இந்த நிலைமை!

@sultan_Twitz
‘சர்கார்’ என்ற தலைப்பை வைத்துள்ளவர்களுக்கே நல்லது செய்ய ஆர்வம் உள்ளபோது, சர்காரை வைத்துள்ள நாங்கள் எவ்வளவு நல்லது செய்வோம் - தமிழிசை

# சர்காரை கையில வச்சிருந்தும் தமிழ்நாட்டுல நோட்டாவை ஒண்ணும் பண்ண முடியலயே?!

@Fazil_Amf
கமல்ஹாசன் சொல்வதைக் கேட்டால் தமிழகம் முன்னோக்கிச் செல்லும் - இயக்குநர் அமீர் 

# நாங்க சிட்னிலதான் இருக்கோம், ஃபிடல் காஸ்ட்ரோதான் எங்க முதல்வர்! - மதுரை மக்கள் அதிரடி

@Selvatwitz
விவசாயிகளுக்காக வங்கிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன - மோடி

# விஜய் மல்லய்யாவுக்கு மட்டும் பேங்க் லாக்கரே திறந்திருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism