Published:Updated:

‘20 ரூபாய் என்னாச்சு கேளுங்கள்’- டிடிவி தினகரனை தெறிக்கவிட்ட குடிமகன்!

‘20 ரூபாய் என்னாச்சு கேளுங்கள்’- டிடிவி தினகரனை தெறிக்கவிட்ட குடிமகன்!
‘20 ரூபாய் என்னாச்சு கேளுங்கள்’- டிடிவி தினகரனை தெறிக்கவிட்ட குடிமகன்!

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு வந்த டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது குடிமகன் ஒருவர் 20 ரூபாய் என்னாச்சு என கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

‘20 ரூபாய் என்னாச்சு கேளுங்கள்’- டிடிவி தினகரனை தெறிக்கவிட்ட குடிமகன்!


கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடக்கும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்வதற்காக டி.டி.வி. தினகரன் கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சிலைத்தடுப்பு பிரிவு அதிகாரியை கோர்ட் மீண்டும் பணியமர்த்தியுள்ளது. அந்த அதிகாரியை கண்டு இந்த அரசு ஏன் பயப்படுகிறது என்று தெரியவில்லை. அவரது நியமனத்தை கண்டு பயந்து கொண்டு சி.பி.ஐ. விசாரணை கேட்க அவசியம் இல்லை. அதுவும் தமிழக சட்ட அமைச்சர் நீதிமன்றத்தை அவமதிக்கும் படி பேட்டி அளித்துள்ளார். அவர் பகலில் பேட்டி கொடுத்தாரா இல்லை இரவில் பேட்டி கொடுத்தாரா என்று தெரியவில்லை. அவர் சிலைகளை தேட தேட இவர்கள் பயப்படுகிறார்கள். எனவே அவரது நியமனம் சரிதான், உண்மை விரைவில் வெளிவரும்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசு என்ன நினைக்கிறதோ அதை மாநில அரசு செய்கிறது. செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க. அம்மாவின் தொண்டர்கள் சிலர் மாற்று இயக்கத்தில் சேருகின்றனர். இதை பெரிதாக்கவேண்டியது இல்லை.

‘20 ரூபாய் என்னாச்சு கேளுங்கள்’- டிடிவி தினகரனை தெறிக்கவிட்ட குடிமகன்!

ஆர்.கே. நகர் தொகுதியில் ஆளும் கட்சியையும், எதிர் கட்சியையும் எதிர்த்து நான் வெற்றி பெற்றேன். அம்மா காலத்தின் அறிவிக்கப்பட்ட திட்டத்தை இந்த அரசு இதுவரை செயல்படுத்த வில்லை. அடிப்படை வசதிகூட செய்ய முடியாத அளவுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். கொங்கு பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்கப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோன்று கஜாபுயலில் பாதிக்கப்பட்ட பகுதியில் அரசு எதுவும் செய்யவில்லை. மக்கள் இன்னும் போராடிவருகின்றனர்.

அம்மா தனித்து போடியிட்டது போன்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாங்களும் தனித்து போட்டியிடுவோம். வரும் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவிப்பால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி தேசிய அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் உள்ள 90 சதவீத தொண்டர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எங்களுடன் வந்து இணைவார்கள். நாங்கள் அவர்களுடன் இணைய  மாட்டோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அடுத்த பிரதமரை தேர்தெடுக்கும் சக்தியாக அ.ம.மு.க. திகழும்" என்றார். 

தினகரன் பேட்டி அளித்துக்கொண்டிருக்கும் போது அங்கு நின்ற குடிமகன் ஒருவர் "20 ரூபாய் என்னாச்சு என முதலில் கேளுங்க" என சத்தமாக கூறினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மேட்டரைத்தான் கேட்கிறார் என நினைத்து தினகரனும், அவருடன் வந்திருந்த நிர்வாகிகளும் தர்மசங்கடத்திற்கு ஆளானார்கள். அங்கிருந்த தொண்டர்கள் அந்த குடிமகனை வேறு இடத்திற்கு தள்ளி கொண்டு போனார்கள். ஆனாலும் அவர் விடாமல் "20 ரூபாய் பத்தி கேளுங்கள்" என்று  கூறிக்கொண்டே இருந்தார். பேட்டி முடிந்த பிறகு எதற்காக இடையில் சத்தம்போட்டீர்கள் என சிலர் கேட்டார்கள். அதற்கு, "கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் செல்லும் அனைத்து பக்தர்களிடமும் சிறப்பு கட்டண தரிசனம் எனக் கூறி 20 ரூபாய் வாங்குகிறார்கள். அதற்கு கண்டனம் தெரிவித்து இந்து அமைப்புகள் போஸ்டர் ஓட்டியுள்ளனர். அதுபற்றி கேட்கும்படி கூறினேன்" என்றார் கூலாக. 20 ரூபாய் மேட்டரை கேட்டு தினகரனை திணறடித்த குடிமகனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.