Published:Updated:

`கரிசல்காட்டில் கரும்பு வளராது; தமிழ் மண்ணில் தாமரை மலராது!’ - கருஞ்சட்டை மாநாட்டில் சுப.வீரபாண்டியன்

`கரிசல்காட்டில் கரும்பு வளராது; தமிழ் மண்ணில் தாமரை மலராது!’ - கருஞ்சட்டை மாநாட்டில் சுப.வீரபாண்டியன்
`கரிசல்காட்டில் கரும்பு வளராது; தமிழ் மண்ணில் தாமரை மலராது!’ - கருஞ்சட்டை மாநாட்டில் சுப.வீரபாண்டியன்

திருச்சியில் பெரியார் நினைவு நாளை முன்னிட்டு பெரியார் கருஞ்சட்டை பேரணியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டனர். திருச்சி கோஹினூர் திரையரங்கம் அருகில் இருந்து தென்னூர் உழவர் சந்தைவரை ஊர்வலமாக திரண்டு வந்தார்கள். இதையடுத்து, திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் தமிழின உணர்வு மாநாடு, பாடகர் கோவன் குழுவினரின் பாடலுடன் தொடங்கியது. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடக்கும் இந்த மாநாட்டில் கி.வீரமணி, ஆணைமுத்து, திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், அதியமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

திருமுருகன் காந்தி பேசுகையில்,``வாக்கு அரசியலுக்காக இந்த மாநாடு நடக்கவில்லை. 50,000 ஆண்டுகளாக தமிழர் இனப் படுகொலை நடக்கவில்லை. ஆனால், அதன்பிறகும், 2009-ம் ஆண்டும் நடைபெற்றது. மீண்டும் இந்திய துணைக்கண்டத்தில் இனப் படுகொலைக்கான திட்டமிடல் நடக்கிறது. நமது சொத்துகளைப் பறித்து, தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கத் திட்டமிடல்தான்.. பசுமை சாலைக்காகவும், மண்ணை அழிக்கும் திட்டங்களாக மீண்டும் வருகிறது. மனுதர்மத்தை அமல்படுத்துவதை தடுக்க வேண்டும். கோயில்களில் பிரசாரம் நடத்துகிறார்கள். எட்டுவழிச் சாலை, மீத்தேன் முதல் அனைத்தும் பணியாக் கும்பலிடம் சிக்கியிருக்கிறது.

தவெறி, சாதிவெறி அரசியல் தலை தூக்கினால் பெரியார் படை தடுத்து நிறுத்தும்.தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பொதுக் கூட்டம் நடத்த வேண்டும். ஆயிரக்கணக்கான கூட்டங்கள் நடத்த வேண்டும். அரசியல் பேச வேண்டும். மக்களை அரசியல் படுத்தும் கூட்டங்கள் நடத்த வேண்டும். அனைத்து இயக்கங்களை ஒருங்கிணைக்க வேண்டும். இந்துத்துவம் மிக நுணுக்கமாக வளருகிறது. தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் தீவிரப்படுத்த வேண்டும். நீலச்சட்டை, சிகப்பு சட்டை பேரணி நடத்த வேண்டும். விடுதலைப்புலிகள் தமீழத்தில் முற்போக்கு அரசியலை கட்டியெழுப்பினார்கள். இன்று கூடியதைவிடவும், இன்னும் நாம் அடுத்தடுத்து ஒன்று கூட வேண்டும். கிராமங்கள் தோறும் பெரியார் மற்றும் முற்போக்கு சித்தாந்தங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும். பெரியாரியம் வீழ்ந்துவிட்டது என்கிறார்கள். அது இல்லை. இந்த இணைப்பு காவிக் கும்பலை விரட்டியடிக்கும்" என முடித்தார்.

தொடர்ந்து பேசிய சுப.வீரபாண்டியன், ``கடந்த 1945-ம் ஆண்டு கருஞ்சட்டை படை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்து 1946-ம் ஆண்டு வைத்தியநாத ஐயர் மதுரையில் மாநாட்டுக்கு தீவைத்தார்கள். அவர்களுக்குத் தெரியவில்லை. 72 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. பெரியார் என்பது ஒரு நூற்றாண்டின் சொல். இங்கு இவ்வளவு இயக்கங்கள் உள்ளது. இவை பெரியார் பெயரிலான கிளைகள்தானே தவிர பிளவுகள் அல்ல. இந்த மாநாட்டின் நோக்கம் மதவெறி எதிர்ப்பு, காவி பாசிச எதிர்ப்பு மட்டுமல்ல. எங்கேனும் ஆணவப் படுகொலை நடக்குமானால் திரள்வோம். இது மதவெறியர்களை மட்டுமல்ல, சாதி வெறியர்களுக்கான எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். சாதி அவமானம், தமிழரே அடையாளம். காவிக்கு மட்டுமல்ல சாதி வெறிக்கும் செய்தி அனுப்புகிறோம். தாமரை மலரும் என்ற கனவு கருகிப் போயிருக்கிறது. கரிசல் காட்டில் கரும்பு வளராது. தமிழ் மண்ணில் தாமரை மலராது’ என முடித்தார்.