Published:Updated:

தனுஷ்கோடிமீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

தனுஷ்கோடிமீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!
தனுஷ்கோடிமீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

ராமநாதபுரம்: தனுஷ்கோடியில் இருந்து மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர்.

இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற விசைப்படகு மீனவர்கள் 30 பேர் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் நேற்று மீன்பிடிக்க சென்ற தனுஷ்கோடி மீனவர்கள் 10க்கும் மேற்பட்டவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர்.

##~~##
விசைப்படகு மீனவர்களுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த 15ஆம் தேதி முதல் தொடங்கியது. ஆனால் 3 கடல் மைல் தொலைவிற்குள் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை இல்லை. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று தனுஷ்கோடியில் இருந்து 2 நாட்டு படகுகளில் மீன்பிடிக்க சென்ற 10க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுள்ளனர்.
3 கடல் மைல் தொலைவிற்கு உள்ளாகவே மீன்பிடிப்பில் ஈடுபட்ட நாட்டுப்படகு மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி சென்றதாக சொல்லி சிறைபிடித்து சென்றிருப்பது இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை காட்டுகிறது.
இரா.மோகன்