Published:Updated:

ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். சரண்

ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். சரண்
ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். சரண்
ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். சரண்

விருதுநகர்: முன்னாள் தி.மு.க கிளைச்செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டியை சேர்ந்தவர் ஜே.எம். கோஸ். கூமாப்பட்டி முன்னாள் தி.மு.க கிளை செயலாளரான கோஸ், கடந்த சட்டசபை தேர்தலின் போது ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் போட்டியிட சீட்டு கேட்டு மாவட்ட செயலாளரான கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு 33 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தேன். ஆனால் பணத்தை வாங்கிக்கொண்டு சீட் தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டால் என்னை மிரட்டுகிறார் என்று சில மாதம் முன்பு அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் ஸ்டேசனில் கோஸ் புகார் கொடுத்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார், கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில் ஜே.எம். கோஸ், கடந்த வாரம் மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டார். கே.கே.எஸ்.எஸ்.ஆர். தூண்டுதலின் பேரில் தி.மு.க நிர்வாகிகள் மல்லி ஆறுமுகம், உதயசூரியன், ஆகியோர் தன்னை கடத்தி சென்று அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கூறினார். இது தொடர்பாக அவரது அண்ணன் மனைவி குருவம்மாள் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

உடனே கூமாப்பட்டி போலீசார், கே.கே.எஸ்.எஸ்.ஆர். உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.  இதையடுத்து, கே.கே.எஸ்.எஸ்.ஆர். சார்பில் அவரது மகன் ரமேஷ் மதுரை ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.  அதில், "எங்களிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் கோஸ் எங்கள் தந்தை மீது பொய்யான புகார்களை கூறி வருகிறார். எனவே எனது தந்தைக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

##~~##
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மே 7ஆம் தேதி சரண் அடைந்து ஜாமீன் பெறலாம் என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து, ஸ்ரீவில்லிப்புத்தூர் அமர்வு நீதிமன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு விரைவு நீதிமன்ற நீதிபதி நல்லதம்பி முன்னிலையில் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். சரணடைந்தார்.
எம்.கார்த்தி