Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என்ற பிரமாண்ட படேல் சிலையைத் திறந்து சாதனை படைத்திருக்கிறது பி.ஜே.பி. அட! தமிழ்ல மெய்யாலுமே அப்படிதாங்க பேர் வச்சிருக்காங்க! பல நூறு கோடி செலவு செய்தவர்கள் கூகுள் ட்ரான்ஸ்லேட்டரை நம்பாமல் ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்திருந்தால், லோக்கல் கைடு கூட தமிழில் அர்த்தம் சொல்லியிருப்பார். இதே ரீதியில் இன்னும் சில சிலைகள் வைத்தால்..?

ஐடியா அய்யனாரு!

statue of அலாரம் அடிக்கல... அதான் லேட்

‘லே
ட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்’, ‘லேட்டா வந்தாலும் லன்ச்சோட வருவேன்’ என பன்ச் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார் ரஜினி. இதை நம்பி ‘பூந்தோட்டக் காவல்காரன்’ விஜயகாந்த் போல உட்கார்ந்திருக்கிறார்கள் மன்றத்தினர். அவருக்கு அமைக்கும் இந்தச் சிலையில், நன்றாக ஓடக்கூடிய வாட்ச் ஒன்று
நிச்சயம் இருக்கும்.

Statue of உன் கதை கதை... என் கதை கதை...

‘க
த்தி...?’ ‘அய்யோ அது என் கதைங்க’, ‘ஏழாம் அறிவு..? - ஏழுமலையான் சத்தியமா என் கதைங்க’ என சர்கார் வரை தொடர்கிறது முருகதாஸ் பஞ்சாயத்து. தீபாவளி தவறாமல் ஃப்ளாஷ் நியூஸில் இடம்பிடிக்கும் அவருக்கு, ஒரு சிலை வைத்துக் கையில் சிலபல சி.டி-க்களையும் கதைத் தொகுப்பையும் கொடுக்கலாம்.

Statue of புரியாத பூரணமாம்

பு
ரியாத மாதிரி பேசுவதே மேதாவித்தனம் என தேவர்மகன் காலம் தொட்டு, அதன் பார்ட் 2 காலம் வரை நம்பிக் கொண்டிருக்கிறார் கமல். பாவம், மய்யத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வளவுதான் முட்டுக்கொடுப்பார்கள். ஒரு கையில் அகராதியுடன், மருதநாயகம் கெட்டப்பில் அவருக்குச் சிலை வைக்கலாம். ரெஃபரென்ஸுக்கு திருவள்ளுவர் சிலை இருக்கிறதே!

Statue of செவனேன்னு இருந்தவரை இழுத்து தெருவுல விட்டு

‘இ
ரும்பு மனிதர்’, ‘இந்திய ஒன்றியத்தின் பிதாமகர்’ என்றெல்லாம் கெத்தாக இருந்த படேலை, ‘ஹே இப்ப எறி இப்ப எறி’ என இழுத்து வந்து மீம் மெட்டீரியல் ஆக்கியிருக்கிறது பி.ஜே.பி. ஏற்கெனவே நோகடிக்கப்பட்ட அவருக்கு, இந்தச் சிலையை வைக்கலாம். கண்டிப்பாக, முந்தைய சிலையைவிட இது நன்றாகத்தான் இருக்கும்.

Statue of இதென்ன பிரமாதம்... இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு

பு
துசு புதுசாகப் பிரச்னைகளைக் கிளப்பி, இந்தப் பின்குறிப்போடுதான் முடிக்கிறது பி.ஜே.பி. மக்களும் ஒரு கட்டத்தில் ‘அதுவே பழகிடுச்சு’ மோடுக்கு வந்துவிட்டார்கள். இப்படி நாட்டுக்காக ஓய்வில்லாமல் ஒழிக்கும் ஸாரி, உழைக்கும் பி.ஜே.பி-யின் ஒவ்வொரு தலைவருக்கும் குட்டி குட்டி சிலைகள் வைத்து ஒரு சிலை சீரிஸே பண்ணலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz