Published:Updated:

`மக்கள் மனதில் அவருக்குத் தனி இடம் உண்டு!' - மன் கி பாத் உரையில் சென்னை 5 ரூபாய் டாக்டரைப் புகழ்ந்த மோடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`மக்கள் மனதில் அவருக்குத் தனி இடம் உண்டு!' - மன் கி பாத் உரையில் சென்னை 5 ரூபாய் டாக்டரைப் புகழ்ந்த மோடி
`மக்கள் மனதில் அவருக்குத் தனி இடம் உண்டு!' - மன் கி பாத் உரையில் சென்னை 5 ரூபாய் டாக்டரைப் புகழ்ந்த மோடி

`மக்கள் மனதில் அவருக்குத் தனி இடம் உண்டு!' - மன் கி பாத் உரையில் சென்னை 5 ரூபாய் டாக்டரைப் புகழ்ந்த மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழமையில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் ரேடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாடுவார். இந்த வருடத்தின் இறுதி உரையை இன்று நிகழ்த்தினார் மோடி.

`மக்கள் மனதில் அவருக்குத் தனி இடம் உண்டு!' - மன் கி பாத் உரையில் சென்னை 5 ரூபாய் டாக்டரைப் புகழ்ந்த மோடி

இந்த ஆண்டு நடந்த பல முக்கியமான சம்பவங்கள் குறித்து மக்களிடம் பேசினார். அவர் பேசும் போது, “ நாட்டு மக்களுக்கு வணக்கம். 2018-ம் ஆண்டு முடியப் போகிறது. நாம் விரைவில் 2019-ம் ஆண்டை எதிர்கொள்ளவுள்ளோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். வரும் ஆண்டு நம்முடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை மேற்கொள்ள நாம் உறுதி எடுக்க வேண்டும். அதே நேரத்தில் நம் நாட்டை, சமூகத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் நம் பங்களிப்பு இருக்க வேண்டும். 

2018-ம் வருடம் நம் நாட்டில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரும் மருத்துவக் காப்பீடு திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ கொண்டுவரப்பட்டது. அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்யப்பட்டது. சர்தார் வல்லபாய் படேலை சிறப்பிக்கும் வகையில், அவருக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கப்பட்டது. இந்த ஆண்டில்தான் நமது நாட்டில் முத்தரப்பு அணுசக்தி திட்டம் ஒப்பந்தமானது. இப்போது நம் நாட்டில் நீர், நிலம், வானத்திலும் (முப்படை) அணுசக்தி திறன் உள்ளது. இதேபோன்ற பல மாற்றங்களை வரும் 2019-ம் ஆண்டிலும் முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 

`மக்கள் மனதில் அவருக்குத் தனி இடம் உண்டு!' - மன் கி பாத் உரையில் சென்னை 5 ரூபாய் டாக்டரைப் புகழ்ந்த மோடி

என் மக்களே, இந்த வருடம் டிசம்பர் மாதம் ஒரு மிகச் சிறந்த மற்றும் அற்புதமான மனிதரை நம்நாடு இழந்துள்ளது. டிசம்பர் 19-ம் தேதி மருத்துவர் ஜெயசந்திரன் சென்னையில் காலமானார். ‘மக்கள் மருத்துவர்’ என்றுதான் அவர் அழைக்கப்படுவர். மக்கள் மனதில் அவருக்கு எப்போதும் ஒரு தனி இடம் உள்ளது. மிகவும் ஏழ்மையான மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ததன் மூலம்தான் அவர் வெளியில் அறியப்பட்டார். ஜெயசந்திரன் எந்த நேரமும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தயாராக இருப்பார் என சிலர் என்னிடம் கூறியுள்ளனர். வயதான நோயாளிகளுக்கு வீடு தேடி சென்று சிகிச்சையளிப்பார் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். 

`மக்கள் மனதில் அவருக்குத் தனி இடம் உண்டு!' - மன் கி பாத் உரையில் சென்னை 5 ரூபாய் டாக்டரைப் புகழ்ந்த மோடி

அதேபோல் டிசம்பர் 25-ம் தேதி கர்நாடகாவை சேர்ந்த சுலகிட்டி நரசம்மாவும் காலமானார். நரசம்மா ஒரு மருத்துவச்சி. அவர் மகப்பேறு பார்ப்பதில் மிகவும் திறமையானவர். கர்நாடகாவில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கும் சென்று இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகப்பேறு சேவை செய்துள்ளார். இதற்காக இந்த வருடம் தொடக்கத்தில் அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. 

`மக்கள் மனதில் அவருக்குத் தனி இடம் உண்டு!' - மன் கி பாத் உரையில் சென்னை 5 ரூபாய் டாக்டரைப் புகழ்ந்த மோடி

இந்த வருடம் தூய்மை இந்தியா திட்டத்துக்கான பிரசாரம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்பதைப் பெருமையாக தெரிவிக்கிறேன். இந்த வருடம் மட்டும் சுமார் மூன்று லட்சம் பேர் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து செயல்பட்டுள்ளனர். நம் நாட்டில் பல மதத்தினர் பல விழாக்களைக் கொண்டாடுகின்றனர். அனைவரும் தங்கள் விழாவின் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அப்போதுதான் நம் நாட்டில் எவ்வளவு விழாக்கள் கொண்டாடப்படுகிறது என்பதும் நம்முடைய கலாச்சாரமும் வெளியில் தெரியும்” எனக் கூறினார்.  இதேப் போன்று கடந்த ஆண்டு நடந்த பல முக்கிய நிகழ்ச்சிகளையும் நாட்டு மக்கள் செய்ய வேண்டிய சில விசயங்களையும் குறிப்பிட்டு பேசினார் பிரதமர். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு