Published:Updated:

`முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம்!’ - காங்கிரஸ் எதிர்ப்பு

`முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம்!’ - காங்கிரஸ் எதிர்ப்பு
`முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம்!’ - காங்கிரஸ் எதிர்ப்பு

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் இஸ்லாமிய முறைக்குத் தடை விதிக்கும் மசோதாவைக் கடந்த 28-ம் தேதி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தாக்கல் செய்தார்.

`முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம்!’ - காங்கிரஸ் எதிர்ப்பு

முத்தலாக் நடைமுறையை கிரிமினல் குற்றமாகக் கருதுவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டையே எடுத்த அ.தி.மு.க.வும் முத்தலாக் மசோதாவில் கிரிமினல் குற்றமாகக் கருதுதல் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை போன்றவற்றை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. 

`முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம்!’ - காங்கிரஸ் எதிர்ப்பு

இறுதியில் நடந்த வாக்கெடுப்பில் முத்தலாக் மசோதா பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றதால் அன்றைய தினமே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்யவிடமாட்டோம் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. மக்களவையைவிட மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் இன்று நடைபெறும் கூட்டம் இந்திய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. 

`முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம்!’ - காங்கிரஸ் எதிர்ப்பு

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி வேணுகோபால், `` முத்தலாக் மசோதா இப்போது உள்ள நிலையில் நிறைவேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட 10 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதாவில் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது மிகவும் தவறானது. எனவே, இதை நாடாளுமன்ற ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இதில் நாங்கள் அரசியல் செய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.