Published:Updated:

தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி! - 4வது முறையாக வங்கதேச பிரதமராகும் ஷேக் ஹசீனா

தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி! - 4வது முறையாக வங்கதேச பிரதமராகும் ஷேக் ஹசீனா
தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி! - 4வது முறையாக வங்கதேச பிரதமராகும் ஷேக் ஹசீனா

வங்க தேசத்தின் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அங்கு 298 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வங்கதேசத்தில் ஆட்சியமைக்க மொத்தம் 151 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஷேக் ஹசீனாவின் கட்சி 281 இடங்களில் மகத்தான வெற்றிபெற்று முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. இதனால் ஹசீனா நான்காவது முறையாக அந்த நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

எதிர்க்கட்சியான தேசியவாத கட்சி ஏழு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளதால் தேர்தலில் முறைகேடு அடைந்துள்ளதாகவும் அதனால் மறு தேர்தல் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. ‘இதுபோன்ற கேலிக்கூத்தான தேர்தல் முடிவுகளைத் தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும். நடுநிலையான அரசு ஒன்றின் மேற்பார்வையில் மிக விரைவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்’ என அக்கட்சித் தலைவர் கமல் ஹுசைன் தெரிவித்துள்ளார் இதற்கிடையில் நேற்று நடந்த தேர்தலையொட்டி நாடு முழுவதும் பல இடங்களில் நடந்த வன்முறையால் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.